headlines

img

அர்த்தமற்ற பிடிவாதம் அழுத்தத்தால் தகர்ந்தது

தாமதமான முடிவு என்றாலும் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். 

உலக அளவில் கொரோனா தொற்றில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்தியா வில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.  தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று தீயைப் போல பரவி வருகிறது. அறிகுறி இல்லாமல் பலருக்கு தொற்று ஏற்படுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்தநிலையில் விடுபட்ட பத்தாம் வகுப்பு தேர்வு உள்ளிட்ட அனைத்தும் நடந்தே தீரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கடி கூறி வந்தார். இப்போது உள்ள சூழ்நிலையில் தேர்வு நடத்து வதும், மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஓரிடத்தில் குவிப்பது பேராபத்தாக முடியும் என்று எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நீதிமன்றத்திலும் தேர்வு நடத்துவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் “ஒன்பது லட்சம் மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பேற்பது, இப்போது தேர்வு நடத்தப்படுவ தால் எந்த ஒரு மாணவர்க்கும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட வாதத்தில் இப்போது தேர்வு நடத்த வில்லை என்றால் எப்போதும் நடத்த முடியாது. அது பேராபத்தை ஏற்படுத்தும், இனி வரும் மாதங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் என்று கூறப்பட்டது. எப்படியாவது தேர்வை நடத்தி விட வேண்டும் என்பதிலேயே மாநில அரசு குறியாக இருந்தது.

தெலுங்கானா மாநில அரசு பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்வு பெற்ற தாக அறிவித்த பின்பும், மாநிலஅரசு அந்த வழியை பின்பற்ற முன்வரவில்லை. இப்போது மாநில அரசு கூறியிருப்பதுபோல மாணவர் களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க தேர்வு ரத்து செய்யப்படுவதாக கூறியிருப்பது நீதிமன்றத் தின் அழுத்தத்தாலும், எதிர்க்கட்சிகள், கல்வியா ளர்களின் அழுத்தத்தாலும் எடுக்கப்பட்ட முடி வேயாகும்.

இந்த முடிவை ஏற்கெனவே எடுத்திருந்தால் மாணவர்களுக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டதை தடுத்திருக்க முடியும். இதன் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் நிம்ம தியடைந்துள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் எதிர்க்கட்சிகள் கூறும் நியாயமான ஆலோசனையை கூட ஏற்க மறுக்கும் அணுகு முறையையே அதிமுக அரசு பின்பற்றுகிறது. இது நல்லதல்ல. அனைத்து விசயத்திலும் கருத் தொற்றுமையை ஏற்படுத்துவதே அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

;