உலகம் முழுவதும் வர்த்தக மற்றும் நிதிப் பரிமாற்றத்திற்கு டாலரே பொதுவான நாணயம் என்ற நிலை மாறத் தொடங்கியுள்ளது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் அமெரிக்க டாலர் முதன்முறையாக 1914 ஆம் ஆண்டு அச்ச டிக்கப்பட்டது. இதுவரை நடந்த இரண்டு உலகப் போர்களிலும் பொருளாதார ரீதியாகப் பலன டைந்த நாடு அமெரிக்காவாகும். முதல் உலகப் போரின்போது சண்டையில் ஈடுபட்ட நாடுகள் அமெரிக்காவிடமிருந்து தளவாடங்களை வாங்கின. அப்போது தங்கத்தை விலையாகக் கொ டுத்தன. உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பு உள்ள நாடாக அமெரிக்கா அப்போது உருவானது. முதலாம் உலகப் போர் வரையில் பிரிட்டனின் பவுண்டுதான் சர்வதேச அளவில் வர்த்தகத்திற் கான பொது நாணயமாக இருந்தது.
இரண்டாம் உலகப் போரின்போது டாலர் வழியாக வர்த்தகத்தை அமெரிக்கா மேற்கொண் டது. போரில் நேரடிப் பங்களிப்பு செலுத்தாமலும், அழிவு எதையும் எதிர்கொள்ளாமலும் இருந்த அமெரிக்கா, ஆயுதத் தயாரிப்பில் கவனம் செலுத் தியது. தன்னுடைய நாணயமான டாலரில் செலுத் துமாறு அனைத்து நாடுகளையும் வற்புறுத்தியது. இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்ற பிறகு, டாலரே நாடுகளுக்கு இடையிலான பொது நாண யமாக உருவானது.
பனிப்போர் காலத்தில் டாலரை வைத்து நாடுக ளைத் தன்வசம் ஈர்க்கும் பணியை அமெரிக்கா செய்தது. வளர்ந்த ஜப்பான் மற்றும் வளரும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் டாலரைப் பெறுவதற்கு அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்தன. ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கியை இதற்காகப் பயன் படுத்திக் கொண்டது. டாலரின் பிடியில் பெரும்பா லான நாடுகள் மூச்சுத் திணறின. நெருக்கடிக்கு மருந்தாக கூடுதல் நெருக்கடிதிணிக்கப்பட்டது.
சோவியத் யூனியன் தகர்வு அமெரிக்காவுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது. ஆனால், சீனாவின் பெரும் பொருளாதார வளர்ச்சி, உலகச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நெருக்கடிகள் தோன்றினாலும், நெருக்கடிகளின் போதும், நெருக்கடிகளுக்குப் பிறகும் மொத்த உலகப் பொருளாதார சூழலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல சீனாவின் வளர்ச்சி காரணமாக இருந்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் அமெரிக்கா வை எட்டிப் பிடிக்கும் வேகத்தில் நகர்கிறது.
அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழலில் இருந்து சீனாவின் வளர்ச்சி மட்டுமல்ல, பிரிக்ஸ், ஏசியன், தென் அமெரிக்கக் கூட்டமைப்பு, ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட பன் னாட்டு அமைப்புகள் மாற்றுப் பாதைகளில் நடை போட உதவுகின்றன. சர்வதேச அளவிலான பயன் பாட்டில், ஆறாவது இடத்தில் தற்போது இருந்தா லும் பல்வேறு நாடுகளின் விருப்ப நாணயமாக சீனாவின் ரென்மின்பி மாறிவருகிறது. அவரவர் நாணயங்களில் பரிமாறிக் கொள்ளலாம் என்கிற சீனாவின் ஆலோசனை உலகின் பல நாடுகளிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வர்த்தகத்திற்கான தேவையாக இல்லாமல், நாடுகளைப் பிடிக்கும் அமெரிக்காவின் போர்க்கருவியாக இருந்த டாலர் மழுங்கி வருகிறது.