headlines

img

சோசலிச வியட்நாமும் சாதித்தது

கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்க ளைப் பாதுகாப்பதில் வியட்நாம் பெரும் பங்காற்றி யுள்ளது என வியட்நாமின் நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.

வியட்நாமின் மொத்த மக்கள் தொகை சுமார் 10 கோடி. புதன்கிழமை காலை 10.30 மணி நில வரப்படி இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்க ளின் மொத்த எண்ணிக்கை 270 மட்டுமே. இவர்க ளில் 222 பேர் நலம் பெற்று வீடு திரும்பிவிட்ட னர். 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், ‘’வியட்நாமில் எந்த மாகா ணத்திலும் கொரோனா நோய்த் தொற்றுக்கான புதிய அறிகுறிகள் தற்போதுவரை தென்பட வில்லை. எனினும் அத்தியாவசியத் தேவைகளற்ற கடைகள் மூடப்படும்’’ என்று அந்நாட்டின் பிரதமர் நுயென் ஜுவான் கடந்த வாரம் அறி வித்திருந்தார்.

முதல் முறையாக ஜனவரி மாத இறுதி யில் வியட்நாமில்கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாத ஆரம்பம் முதல் வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் விமான நிலையங்களில் முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது.

பரிசோதனைகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியது. தொற்று உறுதி செய்யப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட னடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர். இதற்காக பெரிய ஹோட்டல்களை வியட்நாம் அரசு பயன்படுத்திக் கொண்டது. 

தகவல் தொழில்நுட்பத் தொடர்புகள் மூலம் கொரோனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அவ்வைரஸ் எவ்வளவு விரைவில் பரவுகிறது என்ற தகவலை மக்களிடம் மிக விரைவாக வியட்நாம் அரசு கொண்டு சென்றது. நாட்டின் பல்வேறு மையங்களில் பரிசோதனை மையங்க ளை அரசு அமைத்தது. பிரதமர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகம் மூலம் மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லப்பட்டது. 

வியட்நாமின் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டி ருந்தாலும் அதன் முடிவுகள் சிறந்த பலனை அளித்தன. சுமார் 90 நிமிடத்திலேயே ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அவை உறுதிப்படுத்தன. மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவப் பரிசோதனைக் கருவிகள்தான் வியட்நாம் அரசின் கரோனா வைரஸ் எதிர்ப்புப் போராட்டத்தில் பெரிதும் கைகொடுத்தன.

வியட்நாமில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தொடக்கத்தில் மக்கள் மீது கடு மையான கட்டுப்பாடுகளையே அரசு விதித்தது. கட்டுப்பாடுகளின் அவசியத்தை உணர்ந்த மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த னர். மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு தனி மைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கும் பணியிலும் மக்கள் ஈடுபட்டனர்.

மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கொரோனா தொற்று குறைந்த வீச்சில் இருந்த சிங்கப்பூர் தற்போது தெற்காசிய நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடாக மாறியுள்ளது.

ஆனால், வியட்நாம் கடந்த இரு மாதங்க ளாக ஊரடங்கை கடுமையாகவும், மனிதநேயத்து டனும் அமல்படுத்தியதின் விளைவால் அங்கு கொரோனா தொற்றுச் சங்கிலி உடைக்கப் பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அரசாங்க செயல்பாடுகளுக்கு ஒத்து ழைத்த மக்களுக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது. சோசலிச சீனா, கியூபாவைத் தொடர்ந்து உலகிற்கு வழிகாட்டுகிறது சோசலிச வியட்நாம்.

;