headlines

img

பத்திரிகையாளர்களை பாதுகாத்திடுக!

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றிவரும் பத்திரிகை யாளர்கள், ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவது அல்லது ஊதியத்தை குறைப்பது ஆகிய வற்றை எதிர்த்து தேசிய அலையன்ஸ் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்(என்.ஏ.ஜே.), டில்லி யூனியன் ஆப்  ஜர்னலிஸ்ட்ஸ் மற்றும் பிரிஹன்மும்பை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு  தொடர்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இச்சமயத்தில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிக்கு வராத ஊழியர்களை பழிவாங்கும் நோக்கோடு பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் அல்லது ஊதியக்குறைப்பு நடைபெறுகிறது.

தேசிய ஊரடங்கின்போது இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என இந்திய  அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்  துறை அறிவுறுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் மீடியா நிறுவன முதலாளிகளிடம் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், அவற்றையெல்லாம்  பொருட்படுத்தா மல் தொடர்ந்து ஊழியர்கள் பழிவாங்கப்படு கிறார்கள். ஊரடங்கை காரணம் காட்டி மீடியா  நிறுவனங்கள் பத்திரிகையாளர்கள் மற்றும்  ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது, அவர்களது ஊதியத்தை குறைக்கக் கூடாது. இதனை மத்தியஅரசு, இந்தியன் நியூஸ்பேப்பர் சொசைட்டி (ஐ.என்.எஸ்), நியூஸ் பிராட்கேஸ்டர்ஸ் அசோசியேஷன் ஆகியவை உறுதிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை யும் பத்திரிகையாளர்கள் எழுப்பியுள்ளனர். இந்த கோரிக்கை நியாயமானது. இந்த ஊரடங்கு காலத்தில் மீடியா நிறுவனங்கள், பத்திரிகை யாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மேற்கொள்ளப் பட்ட உத்தரவுகளையும், நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

நெருக்கடி நிலை, பேரிடர் காலங்களில் அரசுத்  துறைகள், மின் ஊழியர்கள், மருத்துவர்கள் போன்றவர்களைப் போல மிகவும் முக்கிய மானவர்கள் பத்திரிகையாளர்கள். ஊரே வீடுகளில் அடங்கிக் கிடக்கும்போது உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை களை மக்களுக்கும், மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அரசுக்கும் எடுத்துச் செல்பவர்கள் பத்திரிகையாளர்களே. இதை உணர்ந்து பத்திரிகை நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டும். ஊடகக் கார்ப்பரேட்டுகள் இதையும் வெறும் லாபம் சம்பாதிக்கும் தொழி லாகவே கருதுகிறார்கள். அதன் விளைவே பேரிடரைப் பயன்படுத்தி வேலை பறிப்பது. இப்போதே தமிழகத்தில் பல ஊடக நிறுவனங் கள் இதைத் துவக்கிவிட்டன. இது அறம் அல்ல. உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பினை வழங்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பத்திரிகை யாளர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள உதவித் தொகையை அனைத்து  பத்திரிகையாளர் களுக்கும் விரிவுபடுத்த  வேண்டும்.

;