headlines

img

இது ஒரு புதிய பயணம்

“கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத புதிய மாற்றங்கள் சர்வதேச அரசியல் அரங்கில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன; நாம் இருவரும் ஒன்றுபட்டு பயணித்தால் அந்த மாற்றங்களை பெரிய அளவிற்கு உருவாக்க முடியும்”.  - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இப்படி குறிப்பிட்டார் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங். 

மார்ச் 20-22 தேதிகளில் ரஷ்யாவுக்கு ஜின்பிங் மேற்கொண்ட பயணம் மேற்கத்திய ஊடகங்களில்  முதலாளித்துவ நாடுகளின் எரிச்சலாகவும் புகைச்சலாகவும் தொடர்ந்து வெளிப்பட்டு வரு கிறது. ஆனால் உண்மையில் 1940களில் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் உலகப்  பிரச்சனைக்காக அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் பிரிட்டன் தலைவர்கள் ஒன்று கூடி பேசியதற்குப் பிறகு, உலக அளவில் வல்லா திக்க சக்திக்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெற்றி கரமாக உலக அரசியல் அரங்கில் முன்வைத்து, அதற்கு ஆதரவையும் பெற்றிருக்கிறார்கள் ஜின்பிங்கும் புடினும் என்றால் மிகையல்ல. 

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் ஏராளமாக கையெழுத்தாகின என்ற போதிலும், இந்தப் பயணத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதலுக்கு தீர்வுகாணும் விதமாக 12 அம்ச அமைதித் திட்டம் ஒன்றை சீனா  முன்மொழிந்தது. அதை ரஷ்யா உடனடியாக ஏற்றுக் கொண்டது. ஆனால் உக்ரைனை ஆட்டுவிக்கும் குரலாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம், அமைதிக்கான சீனாவின் அறை கூவலை சற்றும் மதிக்காமல் உடனடியாக நிரா கரித்தது. இருதரப்பிலும் ராணுவத்தை பின்வாங்கச் செய்வது, இருதரப்பிலும் நாங்கள் முதலில் தாக்குவதில்லை என்ற உறுதியை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்களை முன்னி றுத்தி அமைதி ஒப்பந்தத்திற்கு சீனா அறைகூவல் விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா எதிர்பார்த்தது போல, உக்ரைன்  போர் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம், தடைகள் காரணமாக தகர்ந்து விழவில்லை. மாறாக, அமெரிக்காவுடன் சேர்ந்து ரஷ்யாவை எதிர்த்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடு களும் தங்களது எரிபொருள் உள்ளிட்ட பல  உற்பத்திப் பொருட்களின் தேவைகளுக்காக ரஷ்யாவுடன் தொடர்ந்து உறவைப் பேணு கின்றன. அதுமட்டுமல்ல, அமெரிக்காவோடு நெருக்கமான உறவுடன் இருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவுடன், டாலரை புறக்கணித்து, அவரவர் நாணயங்களில் வர்த்தகத்தை தீவிரப்படுத்தியுள்ளன. 

ஜின்பிங் வருவதற்கு முதல்நாள் ஆப்பிரிக்க நாடுகளின் வெவ்வேறு 40 பிரதிநிதித்துவக் குழுக்கள் மாஸ்கோவுக்கு வந்து புடினைச் சந்தித்து உள்ளன. ரஷ்யா-ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடை யிலான உறவை மேம்படுத்தும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. 

ஏற்கெனவே சவூதி-ஈரான் உறவை மீண்டும் மலரச் செய்ததில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள பங்கு வளைகுடா பிரதேசத்தில் புதிய சிந்த னையை ஏற்படுத்தியுள்ளது. ஜின்பிங்கின் பயணம், அமெரிக்கா விரும்பும் ஒற்றை ஆதிக்க உலகிற்கு பதிலாக பன்முக உலகை உறுதிப்படுத்துவதில் நிச்சயம் ஒரு மைல் கல்லே!

 

;