headlines

img

எத்தனை காலம் தான் ஏமாற்றுவீர் எடப்பாடியாரே...

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகள் எங்கே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரூரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழக விவசாயிகளை பொருத்தவரைஇந்த வேளாண் சட்டங்களை வரவேற்கிறார்கள் என்றும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இந்த குரல் இவர்களின் தில்லி எஜமானர்களின்குரல் போலவே உள்ளது. மத்திய வேளாண் துறைஅமைச்சர் நரேந்திர சிங் தோமர், வேளாண் துறையில் மத்திய அரசு கொண்டு வந்த சீர்திருத்தங்கள்நாட்டில் உற்சாகமான சூழலை உருவாக்கியிருக்கிறது என்றும், மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு லட்சக்கணக்கான விவசாயிகள் ஆதரவும்அளித்து வருகின்றனர் என்றும், பல மாநிலங்களும்வரவேற்று உள்ளன என்றும் கூறியுள்ளார்.ஆனால் எதார்த்த நிலைமை என்னவோ இவர்களுக்கு எதிராகவே உள்ளது. உச்சநீதிமன்றம் தலையிட்டு குழு அமைக்க கூறியுள்ளது.இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு வேளாண்சட்டங்களிலிருந்து விதி விலக்கு அளிப்பது பற்றி மத்திய அரசு வட்டாரங்கள் யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை தொடரும் என்ற உத்தரவாதம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளன.இந்த நிலையில்தான் நானும் ஒரு விவசாயிஎன்று கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர், தமிழகத்தில் எந்த பாதிப்பும் வராது என்று  கூறுகிறார்.ஆனால் இவர்களது எஜமானர்கள் மூன்று மாநிலவிவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு விலக்களிக்கலாம் என்று யோசிப்பது ஏன்? அந்தமாநில விவசாயிகள் பாதிக்கப்படுவதால் தானே. அந்த மூன்று மாநிலங்கள் மட்டுமின்றி, நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவதால்தான் நாடெங்கும் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது.

ஆனால் பூனை கண்ணை மூடிக் கொண்டுபூலோகமே இருண்டுவிட்டது என்று எண்ணுவதுபோல இருக்கிறது இவர்களது பேச்சு. விவசாயிகள் மட்டுமின்றி பொது மக்களும் மத்திய அரசின் சட்டங்களால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்களின் சட்டங்கள் அத்தியாவசியப் பொருட்கள் என எதையும் குறிப்பிடவில்லை. எல்லாவற்றையும் வாங்கி ‘கார்ப்பரேட் விவசாயிகளான’ அம்பானி, அதானி போன்றவர்கள் பிரம்மாண்ட குளிர் பதனக் கிடங்குகளில் அவர்களது பாஷையில் ‘சேமித்து’ வைத்துக் கொண்டு இஷ்டம் போல விலையேற்றி விற்றுக் கொள்வார்கள். அதனால் பாதிக்கப்படுவது நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் தானே. எடப்பாடி போன்ற விவசாயிகள் அல்லவே. தமிழகத்திற்கு பாதிப்புஇல்லை என்று சொல்வதால் மட்டும் பாதிப்புஏற்படாமல் போய்விடுமா? நீட் தேர்வு போன்றவைநமக்குமுன் நிதர்சனமாக உள்ளதே. பின்பு இலவச மின்சாரம் தொடரும் என்று எடப்பாடி உறுதியளிக்க வேண்டிய நிலை வந்ததுஏன்? எத்தனைகாலம் தான் ஏமாற்றுவீர்கள் எடப்பாடியாரே.
 

;