headlines

img

அச்சுறுத்தும் டெங்கு

நாட்டின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல்  அதிகரித்துள் ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தனர். தற்போது நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. தருமபுரியில் 4வயது சிறுமியும் திருப்பத்தூரில் 5வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சல் காரணமாக பல மாவட்டங்களில் குழந்தைகள் பலர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

“டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes aegypti) என்ற கொசு மாசுபட்ட நீரைவிட, தேங்கியுள்ள நன்னீரில்தான் அதிகம் பெருகுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார் கள். எனவே, தற்போது கொசு ஒழிப்பில் தீவிரம் காட்டுவதன் மூலம் மட்டுமே டெங்குவில் இருந்து  நம்மை காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 

டெங்கு1,2,3,4 என நான்கு விதமான வைரஸ் கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நான்கில் ஒரு வைரஸ் அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட வைரஸ்கள் தீவிர தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. ஒரு வகை டெங்கு தடுப்பூசி மற்றொரு வகை டெங்கு தாக்குவதை தடுப்பதில்லை. நான்கு வைரஸ்களையும் சமாளிப்பதற்கான பாதுகாப்பான ஒரு தடுப்பூசி இன்னும் தயாராக வில்லை. உலகளவில் ஒரே தடுப்பூசி கண்டறிவ தும் ஒரு சோதனையாகவே இருக்கிறது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு சோதிக்கப்பட்ட  டெங்கு தடுப்பூசி முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனால் டெங்குவால் ஏற்படும் மர ணங்களை தடுப்பது சவாலாக உள்ளது.

இந்தநிலையில் டெங்கு கொசு பாதிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர தொடங்கி விட்டது. வெப்பமண்டலத்தில் மட்டுமே இதுநாள் வரை காணப்பட்ட டெங்கு கொசு, சமீபகாலங்க ளில் தமிழ்நாட்டில், குளுமையான மலைப்பகுதி யான நீலகிரி மாவட்டத்தில் கூட காணப்படுவ தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 5,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் டெங்கு கொசு பரவல் இருப்பதை மருத்துவ நிபுணர் கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாதுகாப்பான தடுப்பூசி இதுவரை செயல் பாட்டிற்கு வரவில்லை என்பதால் அதுவரை நாம் நமது சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் சுகாதார மாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் சுகாதாரத்துறையினர். எனவே அரசாங்கமும்  காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடவேண்டும். மக்கள் ஒத்துழைப்போடு குடியிருப்புப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.