headlines

img

மாற்று அரசியல் சக்தி!

பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா.வின் 27 ஆவது உச்சி மாநாடு எகிப்தில் நடந்து முடிந் திருக்கிறது.  இதில் கடந்த 30 ஆண்டுகளாக வலி யுறுத்தப்பட்டு வந்த பருவநிலை மாற்றப் பாதிப்புக் களைச் சமாளிக்க புதிய நிதி தொகுப்பை உரு வாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இது வர வேற்கத்தக்கது.

ஆனால் இந்த நிதி தொகுப்பைக் கையாள்வது குறித்த, உலக நாடுகளின் பங்களிப்பு குறித்த வரை யறை இன்னும் தெளிவாகவில்லை. உலகம் முழு வதும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவது பெரும் பகுதி சாதாரண அடித்தட்டு உழைக்கும் மக்கள்தான். இந்த நிதி முறையாக அவர்களைப் பாதுகாப்பதற்குச் சென்று சேருவதை உறுதி செய் யும் வகையில் வரையறைகள் உருவாக்கப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக் கப்படும் 161 நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின்  பாதிப்பு மட்டும் 87 பில்லியன் டாலர்.

ஆனால் ஐ.நா. நிதி தொகுப்பில் பாரிஸ் உடன் படிக்கையின்படி ஆண்டிற்கு  100 பில்லியன் டாலர் மட்டுமே வரும். இதனைப் பாதிப்பிற்குள்ளாகும் நாடுகளுக்குப் பகிர்ந்தளித்தால் ஒவ்வொரு நாட் டிற்கும் எவ்வளவு கிடைக்கும்?  எப்படிப் பார்த்தா லும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பிற்கும், நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிதி இலக்கிற்கும் இடை யில் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் இருக் கிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த நிதி  யானைப் பசிக்கு சோளப்பொரி போடுவது போல்தான் இருக்கும்.

இந்த இழப்பீடு மட்டும் ஒரு போதும் பருவ நிலை மாற்றத்தை தடுக்க உதவாது. புவிவெப்ப மய மாதலுக்கு அடிப்படையே   அதிகமான கரியமிலவாயு வெளியேற்றம்தான். அதனைக் குறைப்பதற்கான இலக்கு எதுவும் நிர்ணயம் செய்யாமல் மாநாடு முடிந்திருக்கிறது. இது ஏமாற்றமளிப்பதாகவே இருக்கிறது. 2015ஆம் ஆண்டு பாரிஸில் தொழிற் புரட்சிக்கு முந்தைய நிலையை அடைய  1.5 டிகிரி  செல்சியஸ் வெப்பத்தை குறைக்க இலக்கு நிர்ண யம் செய்யப்பட்டது. அந்த இலக்கை எட்ட அமெ ரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் ரூ.8 லட்சம் கோடி தருவதாக உறுதியளித்திருந்தன. ஆனால் இன்று வரை அளிக்கவில்லை.

இந்தியாவில் ஒரு தனி நபரின் ஆண்டு சராசரி கார்பன் உமிழ்வு 1.7 டன். இதுவே அமெரிக்காவில் ஒரு  15 டன் ஆக இருக்கிறது. இதிலிருந்தே வளர்ந்த நாடுகள் எந்தளவிற்கு கார்பன் உமிழ்வை வெளி யிடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளமுடியும். 

உலகின் நுரையீரல் என்றழைக்கப்படும் அமே சான் காடுகள் அமைந்துள்ள நாடுகளின் அவசர உச்சி மாநாட்டை கூட்ட வேண்டும் என்று பிரேசில், இந்த மாநாட்டில் கோரியிருந்தது. இது விரைவில் நடத்தப்படுவது அவசியம்.

முதலாளித்துவ நாடுகளால் ஒருபோதும் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியாது. அதற்கு மாற்றான அரசியல் சக்தி வந்தால்தான் சாத்தியம் என்று சுற்றுச்சூழலுக்கான கோல்டு மேன் விருது பெற்ற பிரஃபுல்ல சமந்தரா தெரிவித் துள்ளார். முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலி சம்தான். அதுதான் நிதி மூலதனத்தின் கொள்ளை லாப வேட்டையிலிருந்து மனித சமூகத்தை மட்டு மின்றி, இந்த பூவுலகையும் பாதுகாக்கும்.

;