headlines

img

டெல்லியில் 120.5 டிகிரி வெயில் - வடமாநிலங்களும் பாதிப்பு

கோடைகாலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசத்தில் வெயில் தாக்கம் மிரட்டும் வகையில் இருந்தது. டெல்லியில் உள்ள முன்கேஷ்பூர் பகுதியில் வெயிலின் அளவு 120.56 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. நஜாப்கார் பகுதியில் 120.38 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்த கடுமையான வெயில் காரணமாக டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், வீட்டிலேயே தங்கி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் பண்டல்சந்த் பகுதியில் 120.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் 115 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளன.

;