ஆளுநர் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் பொங்கல் திருநாள் என்று கூட குறிப்பிட மறுக்கிறார். பொங்கல் திருநாளின் ஒரு பகுதியாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் திருநாளாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் படத்திற்கு காவி வண்ணம் பூசிக் களிப்படைந்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் திருவள்ளுவரை அவமதித்து வருகிறார் இவர்.
உலகம் பழிப்பதை விட்டொழித்துவிட்டால் மழிப்பதும், நீட்டலும் கூட தேவையில்லை என துறவுக்கோலத்தையும் துறந்தவர் திருவள்ளுவர். ஆனால் ஆளுநர் ஏற்பாட்டில் வரையப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடை அணிந்திருப்பது போலவும் விபூதி பட்டை அடித் திருப்பது போலவும் சித்தரித்து வைக்கப்பட்டுள் ளது. தமிழக அரசினால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் படத்தை யும் அவர் ஏற்க மறுக்கிறார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் சனாதன நாகரிக மரபில் வாழ்க்கையின் ஆழத்தை கற்றுக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று தன்னுடைய மனுஅநீதி, வர்ணாசிரமச் சிந்தனையை வள்ளுவ ரின் மீது ஏற்றி திருக்குறளுக்கு புது உரை எழுதப் புறப்பட்டிருக்கிறார் ஒன்றிய அரசின் நியமனப் பதவிக்காலம் முடிந்த பிறகும் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி.
வள்ளுவர் பேசியுள்ள அறம் என்பது முற்றிலும் வர்ணாசிரம தர்மத்திற்கு எதிரானது. பிறப்பினால் பேதம் கற்பிக்கும் மநுஅநீதியை மறுத்து ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனப்படுத்தியவர் திருவள்ளுவர். வெளிப் படையாக அவர் எந்தவொரு மதக்கருத்துக் களையும் தன்னுடைய திருக்குறளில் கூறியவர் அல்லர். ஆனால் கடவுள் பக்தியின் உன்னதத்தை வள்ளுவர் பேசியதாக ஆளுநர் உருட்டுகிறார்.
ஆர்எஸ்எஸ் பரிவாரம் வள்ளுவரை வளைக்க முயல்வது இது முதன்முறையல்ல. பாஜகவைச் சேர்ந்த தருண்விஜய் என்பவர் திருவள்ளுவருக்கு வடநாட்டில் சிலை வைக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு அவருடைய சிலையை வைக்க மனமின்றி மூட்டைகட்டி போட்டுவிட்டு போனவர்தான்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் இப்போது திருவள்ளுவர் மீது திடீர் பாசம் பொங்குகிறது. திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் எதிராகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் மீது அளவில்லாமல் வரி சுமத்தும் மன்னன் இரவிலே கன்னக்கோல் வைக்கிற கள்வர்களுக்கு சமமான வன் என்கிறார் வள்ளுவர். ஆனால் ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் மக்களை வதைக்கும் பிரதம ருக்கு அவருடைய பெயரை உச்சரிக்கும் தகுதி யில்லை. இவர்களது தத்துவ வறுமை காரண மாகவே வள்ளுவ அறத்தை தின்று செரிக்க முயல்கிறார்கள். எத்தனையோ காலப்புயல்களை கடந்து நிற்கும் வள்ளுவம் இவர்களது நிறமாற்றத்தையும் நிராகரித்து நிமிர்ந்து நிற்கும்.