அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு அனல் பறக்கும் என்ற கருத்துக்கணிப்பாளர்களின் கணிப்புகளை பொய்யாக்கி, டொனால்டு டிரம்ப் 538 தேர்தல் தொகுதி வாக்கு களில் (Electoral College votes) 312 வாக்குகளை பெற்று, 51 விழுக் காடு வாக்குகள் மூலம் கமலா ஹாரிஸை பின்னுக்கு தள்ளி, தீர்க்கமான வெற்றியைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸின் பிரச்சாரத்தை ஊடகங்கள் தூக்கிப்பிடித்தபோதிலும்கூட, கடந்த ஒரு மாதத்தில், டிரம்ப் அதிக செல் வாக்கு பெற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும், அமெரிக்காவில் குடி யேறியவர்களுக்கு எதிராக அவர் உமிழ்ந்து வந்த வெறித்தனமான பேச்சு கள் மூலமாகவும், அவர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகிறார் என்றும் சுதந்திரமான அரசியல் நோக்கர்கள் தெள்ளத்தெளிவாகக் கூறி னார்கள். பைடன் ஆட்சிக் காலத்தில் விலைவாசிகள் விண்ணை நோக்கிச் சென்றதும், மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியும் கூட டிரம்ப் வெற்றிக்கு உதவி இருக்கிறது. இதற்கு நேரெதிராக, தேர்தல் பிரச்சாரத்தின்போது கமலா ஹாரிஸின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. டிரம்ப் ஆட்சிக்கு எதிராக எவ்விதமான மாற்று தொலைநோக்குப் பார்வையையோ அல்லது கொள்கையையோ அவர் முன்வைக்கவில்லை. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் குறித்தும், கார்ப்பரேட்டுகள் அடிக்கும் கொள்ளைக்கு எதிராகவும் மற்றும் வால் ஸ்ட்ரீட் மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் ஒரு தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தாரானால் அது அவருக்கு ஆதரவாக வாக்காளர்களை அணிதிரட்டி இருந்திருக்கக் கூடும். ஆனால் ஹாரிஸ் கட்சியில் உள்ள கோடீஸ்வரர்கள் அவ்வாறெல்லாம் கமலா ஹாரிஸ் பிரச்சாரம் மேற் கொள்ளாமல் பார்த்துக் கொண்டார்கள். இவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது இவர்கள் முன்வைத்த முக்கியமான பிரச்சனை என்பது பெண்களின் பிள்ளை பெறுவதற்கான உரி மைகள் (reproductive rights of women) மற்றும் கருக்கலைப்பிற்கான உரிமை என்பதாகும். மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு இவை மட்டும் போதுமானதில்லை. பாலினப் பிரச்சனை முக்கியமானது என்பதை தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன. கடந்த காலங்களில் டிரம்பிற்கு ஆதரவாக வெள்ளையர்கள் இருந்தார்கள். இப்போது அவர்களுடன் கறுப்பினத்த வர்களில் ஒரு பகுதியினரும், லத்தீன் ஆண்களில் ஒரு பகுதியினரும் டிரம்பிற்கு ஆதரவாகச் சென்றனர். இவர்கள் கமலா ஹாரிசை ஆதரிக்க விரும்பவில்லை. இவர்கள் சமூகத்தில் ஆழமாக இருக்கும் பெண்கள் மீதான வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தினர்.
பாரம்பரிய ஆதரவாளர்கள் முடக்கம்
கமலா ஹாரிஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி, தொழில் வல்லுநர்கள், அதிக ஊதியம் பெறும் கல்லூரிப் பட்டதாரிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் கட்சி என கருதப்படுகிறது. குறிப்பாக மிச்சிகன், பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் ஓஹியோ போன்ற மத்திய மேற்கு மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் பாரம்பரிய ஆதரவாளர்களாக இருந்த தொழிலாளர் வர்க்கத்தை இந்தக் கருத்துதான் முடக்கியது. இதன் அடிப்படையில்தான் தொழிலாளர் வர்க்கம் பணக்காரர்களுக்கு வரி வெட்டுகளை ஏற்படுத்துவது உட்பட வர்த்தகச் சார்பு, கார்ப்பரேட் சார்பு கொள்கைகளைப் பின்பற்றிடும் கமலா ஹாரிஸை ஆதரிக்க முன்வந்தது. ஜனாதிபதியாகியுள்ள டிரம்ப் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை முற்றிலுமாக மாற்றியமைத்து, எண்ணெய் மற்றும் ஃப்ராக்கிங் (fracking) தொழிலை மேம்படுத்திடுவார். மிச்சிகன் போன்ற மாநிலங்களில்கூட ஹாரிஸ் தோற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பைடன்-ஹாரிஸ் நிர்வாகம் காசாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்து வருவதுதான். இதன் காரண மாக அங்கு வாழும் அரபு-அமெரிக்கர்கள் வாக்குகளை கமலா ஹாரிஸ் இழக்க வேண்டி வந்தது.
வலது சாரி - பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு வழி...
டிரம்பின் வெற்றியை ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி கட்சிகளின் முன்னேற்றத்தின் பின்னணியில் பார்த்திட வேண்டும். இந்த நிகழ்வின் முக்கிய அம்சம் குடியேற்றம் மற்றும் வெளி யாரின் பயம். குடியரசுக் கட்சியினர் ‘செனட்’ (Senate) சபையில் பெரும் பான்மையைக் கைப்பற்றியிருந்த நிலையில், இப்போது ‘காங்கிரஸ்’ (Congress) சபையிலும் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இது வலதுசாரி மற்றும் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள டிரம்பிற்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறது. வெளி உலகத்தைப் பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சி மற்றும் குடி யரசுக் கட்சித் தலைவர்களுக்கு இடையே தேர்வு செய்வதற்கு வேறுபாடு அதிகம் இல்லை. இரண்டு கட்சிகளும் ஏகாதிபத்திய போர் வெறியர் கள். அது கிளின்டனாக இருந்தாலும் சரி, அல்லது புஷ்ஷாக இருந்தாலும் சரி. இருவருமே போர் வெறியர்கள்தான். இராக் மற்றும் மேற்கு ஆசிய மக்கள் அமெரிக்க போர் இயந்திரத்தின் இலக்குகளாக இருந்தனர். டிரம்ப்பைப் போலவே, பைடனும் இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவு கொள்கையை பின்பற்றினார். காசா மீதான இனப்படுகொலைப் போருக்கு பைடன் நிர்வாகத்தால் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராணுவத் தலையீடுகள் மூலமாகவோ அல்லது பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அமெரிக்க மேலாதிக்கத்தைப் பிரயோகித்தாலும், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையில் தெரிவு செய்வதற்கு வேறுபாடு அதிகம் எதுவும் இல்லை.
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர்
டிரம்ப் ஜனாதிபதியாகத் தேர்வாகியிருப்பது பாலஸ்தீனர்களைப் பொறுத்தவரை கெட்ட செய்தியாகும். ஏனெனில் டிரம்ப், இஸ்ரேலின் தீவிர ஆதரவாளர். நேதன்யாகுவை வலுவாக ஆதரிப்பவர். அதே போன்றே சீனாவுடனான உறவுகளும் மிகவும் மோசமாகிடும். ஏனெனில் டிரம்ப் வர்த்தக உறவுகளில் கூடுதல் கட்டணங்களை விதிக்கக்கூடும். பொரு ளாதாரத் தடைகளை ஏற்படுத்தக்கூடும். ஐரோப்பிய நட்பு நாடுகளுட னும், நேட்டோவுடனும் உறவுகள் நிச்சயமற்ற கட்டத்திற்குள் நுழையும். ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போரில், டிரம்ப் உக்ரைனுக்கு நிபந்தனையற்ற முறையில் ஆதரவை வழங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தத்தில் சர்வதேச உறவுகளில் பெரும் நிச்சயமற்ற காலகட்டம் ஏற்படப் போகிறது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சி யைக் கொடுத்திருக்கும். ஏனெனில் டிரம்ப், மக்களைப் பிளவுபடுத்தி மகிழ்ச்சியடையும் சித்தாந்தத்தைப் பெற்றிருப்பதால் அந்த அடிப்ப டையில் டிரம்ப் இவருக்கு ஒரு நண்பராவார். ஏற்றுமதி செய்யப்படும் இந்தி யப் பொருட்களுக்கு அதிக வரிகள் விதிப்பது, எச்-1 பி(H-1B) விசாக்களை இறுக்குவது போன்ற நடவடிக்கைகள் அதிகமாகும் என்ற போதிலும் இரு வருக்குமிடையேயான உறவுகளில் மேலும் வேகத்தை எதிர்பார்க்கலாம்.
நவம்பர் 6, 2024,
தமிழில்: ச.வீரமணி