headlines

img

அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரங்கள்!

வேலையின்மையால் இந்தியாவில்  தற்கொலை செய்து கொள்பவர்களின்  எண் ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரங்கள் தெரி விக்கின்றன. இதிலிருந்து நாட்டின் பொருளாதா ரம் மற்றும் மக்களின் வாழ்நிலை எந்த லட்ச ணத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள லாம்.  இதற்கு முன்பு இந்தியாவில் விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்து கொள்வது தான் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது அதிதீவிர பிரச்சனையாக வேலை யின்மை உருவெடுத்திருக்கிறது. கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலையை விட, வேலையின்மையால்  தற்கொலை அதிகரித்திருக்கிறது. 

2018ல் விவசாயிகளின் தற்கொலை 7.7 சத விகிதமாகவும் வேலையின்மையால் நடைபெற்ற தற்கொலைகள்  9.6 சதவிகிதமாகவும் பதிவு செய் யப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்தியாவில் 2018 க்கு முந்தைய காலங்களை விட 3.6 சத விகிதம் தற்கொலைகள்  உயர்ந்திருக்கிறது என்று மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

2018ல் சராசரியாக ஒவ்வொரு நாளும் 28 விவசாயிகள் வீதம் மொத்தம் 10 ஆயிரத்து 349 பேர்  வாழ வழியின்றி  தற்கொலை செய்து கொண்டி ருக்கின்றனர். அதேநேரம் வேலையின்மையால் ஒவ்வொரு நாளும் சராசரியாக 35 பேர் வீதம் 12 ஆயி ரத்து 936 பேர்  தற்கொலை செய்து கொண்டிருக்கின் றனர். அப்படியென்றால் பதிவு செய்யப்படாத தற் கொலை எந்தளவிற்கு தேசம் சீர்குலைவிற்கு உள்ளாகி வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் அனைத்துப் பகுதி மக்களின் உரிமைகள் அராஜகமான முறையில் பறிக்கப்படுகிறது. குறிப்பாக 2019ல் மோடி அரசு இணைய சேவையை 4 ஆயிரத்து 196 மணி நேரம் துண்டித் திருக்கிறது. இதன் காரணமாக 130 கோடி டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று “டாப்10 விபிஎன்” ஆய்வு தெரிவிக்கிறது.  

முதன் முறையாக இந்தியாவின் தலைநகர் தில்லி மற்றும் வர்த்தக தலைநகர் மும்பை உள்ளிட்ட விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் குறைந்திருக்கிறது என்கின்றன புள்ளி விபரங்கள். மும்பை விமான நிலையத்தில் மட்டும் 2018ல் பயணிகள் போக்குவரத்து 7 சதவிகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாளும் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி செல்கிறது.  ஆனால்  பாஜக தலைமையிலான  மோடி அரசு பெரும்பான்மை பலத்தோடு இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல்; ஆர்எஸ்எஸ் திட்டத்தின் படி  நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தி இந்துராஷ்டிராவை உருவாக்குவதில் மட்டுமே முனைப்போடு இருந்து வருகிறது. மோடி அரசின் இந்த கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டிட அனைத்து பகுதி மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும்.