headlines

img

அமெரிக்க வர்த்தக  அமைச்சரின் மிரட்டல்!

அமெரிக்க வர்த்தக  அமைச்சரின் மிரட்டல்!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதும் விற்பனையாகாத ராணுவத் தளவாடங்களை இந்தியாவின் மீது திணிக்கப் பார்க்கிறார்.  சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் அமெரிக்காவிடமிருந்து அதிகளவில்   ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசியுள் ளார். அந்த தளவாடங்களுக்கு தேவை இருந்தா லும் இல்லாவிட்டாலும் அதை இந்தியா வாங் கியே தீரவேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார்.

 அதுமட்டுமல்ல, இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதை நிறுத்துமாறும் மிரட் டியுள்ளார்.  பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலிருந்து வாங்கும் பாதுகாப்பு உபகரணங்களை ‘முட்டாள் தனம்’ என்று அவர் ஏளனம் செய்தார். அந்த ஆயு தங்களில் திறன் இல்லை என்றும் வெறும் சத்தம் மட்டுமே வரும் என்றும் கிண்டல் அடித்துள்ளார்.  

 2016 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் டசால்ட்  நிறுவனத்திடமிருந்து 36  ரஃபேல் போர் விமா னங்களை இந்தியா வாங்கியது. விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் நிறுத்துவதற் காக இந்திய கடற்படைக்கு  26 ரஃபேல்-எம் போர்  விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கான இரண்டு ஒப்பந்த புள்ளியிலும் அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தன.  

இந்தியா வரலாற்று ரீதியாக ரஷ்யாவிலி ருந்து கணிசமான அளவு ராணுவ உபகரணங்க ளை வாங்குவது அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டு கிறது. இந்தியா தனது மொத்த ராணுவத் தளவாடத் தேவையில் 36விழுக்காட்டை ரஷ்யாவிடமிருந் தும் 33 விழுக்காட்டை பிரான்சிடமிருந்தும் 13 விழுக்காட்டை இஸ்ரேலிடமிருந்தும் வாங்குகி றது. மீதமுள்ள 18 விழுக்காட்டை உள்நாட்டிலும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்தும் தருவிக்கிறது. மோடி அரசும் அமெரிக்க அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து அந்நாட்டில் இருந்து ஏராளமான போர் விமானங்களையும் சினூக் மற்றும் சீஹாக் ராணுவ ஹெலிகாப்டர்கள், இலகு ரக காலிஃபர் பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களையும் கொள்முதல் செய்துள்ளது.  மேலும் கடந்த அக்டோபரில் துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ஏவுகணை தடுப்பு  அமைப்புகளை வாங்கவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இவ்வளவு கொள்முதலுக்கு பிறகும் டிரம்ப், லுட்னிக் மற்றும் பல அமெரிக்க ஆயுத வியாபாரிக ளுக்கு பசி அடங்கவில்லை. அமெரிக்கா, தன்னிட மிருந்து வாங்கும் ராணுவத் தளவாடங்களை எப்படி, எங்கு பயன்படுத்தலாம் என்பதற்கு கடுமை யான நிபந்தனைகளையும் விதிக்கிறது. இண ங்கத் தவறினால், சம்பந்தப்பட்ட உபகரணங்க ளுக்கான தொழில்நுட்ப ஆதரவையும், உதிரி பாகங்கள் விநியோகத்தையும் நிறுத்தி பழிவாங்கும் என்பதுதான் அதன் கடந்த கால  வரலாறு.  எனவே அமெரிக்க ராணுவ தளவாட கொள்முதல் இந்தியாவுக்கு எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை.