headlines

img

நிர்மூலமாக்கப்படும் நீதித்துறை...

‘’நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின்பு அரசின் நிய மனத்தைப் பெறுவது , நீதித்துறையின் சுதந்திரத் திற்கு ஒரு கறையாக இருக்கிறது’’ என்று கூறிய வர் வேறு யாருமல்ல,  உச்சநீதிமன்றத்தின் முன் னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்தான். இன்று அந்த கறையை அவரே எடுத்து பூசிக்கொண்டு இது கறையல்ல, காட்சிப்பிழை என்கிறார். 

ரஞ்சன் கோகோயை ஜனாதிபதி மாநிலங்க ளவை உறுப்பினராக நியமனம் செய்திருக்கி றார். அது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியி ருக்கிறது. காரணம்  ஜனாதிபதியால் நிய மிக்கப்படும்  மாநிலங்களவை உறுப்பினர்கள் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூகசேவை ஆகிய துறைகளில் இருந்து நிய மிக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசியல் சாசனத்தின் விதி. ஆனால் இங்கு அர சியல் சாசன விதிகள் மீறப்பட்டு, தலைமை நீதி பதியாக இருந்து ஓய்வுபெற்ற ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட் டுள்ளார்.   

தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்த போது, நடைபெற்ற வழக்குகளில் பாஜக விற்கு சாதகமாக நடந்து கொண்டார் என்பது ஏற்கனவே இவர் மீது இருந்து வரும் விமர்சனம். அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த எம்பி பதவி நியமனம் இருக்கிறது. குறிப்பாக ரபேல் ஊழல் வழக்கில் சீலிட்ட கவரில் ஆவ ணங்களை வாங்கிக் கொண்டு வழக்கு தொடுத்தவ ருக்கு கூட அதனைத் தராமல், அதன் மீது வாதம் நடத்த வாய்ப்பு கொடுக்காமல் தீர்ப்பு வழங்கிய வர் இவர். மேலும் ரபேல் ஊழல் புகாரில் பூர்வாங்க விசாரணையை நடத்த வேண்டும் என உத்தர விட்ட சிபிஐ இயக்குநர் அலோக்வர்மாவை அதே பதவியில் நீடிக்க இவர் அனுமதிக்கவில்லை. 

அயோத்தி வழக்கில் ‘நம்பிக்கையின்’ அடிப்ப டையில் தீர்ப்பு வழங்கியதோடு, தீர்ப்பு எழுதிய வர்கள் யார் என்று தெரியாமலேயே  தீர்ப்பு வெளி யானது இவரது தலைமையில்தான். தேர்தல் நன் கொடை பத்திர திட்டம் ஜனநாயகத்திற்கு உகந்த தல்ல என்ற வழக்கில் நன்கொடை அளிப்பவர்க ளின் பட்டியலை சீலிடப்பட்ட கவரில் பெற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய் அதனை வெளியிட வில்லை.  காரணம்  95 சதமான நன்கொடை பாஜக விற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நீதிபதி லோயா மர்ம மரணம்,  அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வழக்கு, குடியுரிமை சட்டத்திருத்த வழக்கு, காஷ்மீர் 370வது பிரிவு நீக்கம் குறித்த வழக்கில் ரஞ்சன் கோகோய் அணுகிய விதம் கடும் விமர்ச னத்தை உருவாக்கியது. குறிப்பாக  தனக்கு கீழ் பணிபுரியும் பெண் தன் மீது கொடுத்த பாலியல் புகாரை தானே விசாரித்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாதாட ஒரு வழக்கறிஞரைக் கூட அனுமதிக்காமல் தீர்ப்பு வழங்கியதும் நீதிபரிபா லன முறையையே நிலைகுலைய செய்த சம்பவம் ஆகும்.

அப்படிப்பட்ட ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருப்பது, நீதித்துறையை மட்டுமல்ல, மாநிலங்களவையின் மாண்பையும் சீர்குலைக்கும் செயல் ஆகும். ஆகவே ரஞ்சன் கோகோய் எம்பி பதவி நியமனத்தை திரும்பப் பெற வேண்டும்.