headlines

img

வரும் முன் காப்போம்

வரும் முன் காப்போம்

பீகாரில் பெரும் குழப்பத்தையும், குளறுபடிக ளையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிகளை நாடு முழுவதும் விரிவுபடுத்த தேர்தல் ஆணை யம் எடுத்துள்ள முடிவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் வேரில் வெந்நீரை ஊற்றுகிற செயலாகும்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை குறுக்கு வழியில் அறுவடை செய்ய முயல்வோருக்காக தேர்தல் ஆணையம் கண்டுபிடித்த குயுக்தியான  குறுக்குவழிதான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணியாகும். உச்சநீதிமன்றம் வரை சென்று உச்சந்தலையில் குட்டுவாங்கிய பிறகும் தேர்தல் ஆணையம் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வதாக இல்லை. 

பீகாரில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக் கையால் 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்குரி மையை இழக்கும் நிலை ஏற்பட்டது. உச்சநீதி மன்றத்தின் தலையீடு, எதிர்க்கட்சிகளின் தொ டர்ச்சியான போராட்டத்தின் காரணமாக தேர்தல் ஆணையம் சற்று இறங்கி வந்தது. இருந்த போதும் 47 லட்சம் பேரின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மை மக்க ளின் வாக்குரிமையை குறி வைத்தே பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் இந்த வேலை யில் ஈடுபட்டுள்ளது. இந்த தில்லுமுல்லு வேலை களுக்கு தோதானவர்களையே தேர்தல் ஆணையர்களாக ஒன்றிய அரசு நியமிக்கிறது. 

இந்நிலையில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளப் போவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்கம் என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். ஆனால்  சிறப்பு திருத்தப்பணி என்ற பெயரில் பொருத்த மற்ற விதிகளை தேர்தல் ஆணையம் புகுத்து கிறது. வாக்குத் திருட்டின் காரணமாகவே மகா ராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்த்து இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டக் களத்தில் குதித்துள் ளன. இந்நிலையில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ள வாக் காளர் பட்டியல் திருத்தம் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களின் வாக்குகளை திட்ட மிட்டு நீக்குவதற்கு பின்னப்படும் சதி வலையின் ஒரு பகுதியே இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல்  திருத்தப் பணியாகும் என்ற விமர்சனம் கடுமை யாக எழுந்துள்ளது.

பெண்கள், சிறுபான்மையினரின் வாக்கு களை நீக்க திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியி ருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் மூலமாக ஒன்றிய ஆட்சியாளர்கள் செயல் படுத்த திட்டமிட்டுள்ள தீய திட்டத்தை எதிர்த்து விரிவான, பரந்துபட்ட போராட்டமும், விழிப்பு ணர்வும் அவசியமாகிறது.