இரட்டை அவமானம்
அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ, உக்ரைன் போரை “மோடியின் போர்” என்று அழைத்திருப்பது முதலாளித்துவ அரசியலின் மிகக்கீழ்மையான முகத்தை வெளிப்படுத்துகிறது. இந்த அவமானகரமான கருத்து அமெரிக்க ஏகா திபத்தியத்தின் சர்வாதிகாரப் போக்கையும், அதன் கட்டுக்கடங்காத குரூரத்தையும், அராஜகத்தையும் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
உக்ரைனில் நடைபெறும் யுத்தத்திற்கு இந்தி யாவை பொறுப்பேற்க வைத்து பலிகடா ஆக்கும் இந்த மோசடியான அமெரிக்க நிலைப்பாடு கடு மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியா, ரஷ்யா விடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது என்பதற்காக மட்டுமே 50% கூடுதல் வரி விதித்து பொருளாதார முற்றுகை மேற்கொண்டுள்ளது அமெரிக்கா. அதே நேரத்தில், ரஷ்யாவிலிருந்து, பிற நாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்வதை மௌனமாக ஏற்றுக்கொள்ளும் இந்த இரட்டை நிலைப்பாட் டில் அமெரிக்காவின் பொய்மைத்தனமும் சர்வாதிகாரப் போக்கும் தெளிவாகிறது.
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசெண்ட் இந்தியாவுடனான உறவை “சிக்கலானது” என்று அழைப்பதும், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் பேரத்தை பகிரங்கமாக விமர்சித்து, மிரட்டுவதும் இந்தியாவின் இறையாண்மையை நேரடியாக அவமதிக்கும் செயலாகும். எந்த நாடு என்ன வாங்க வேண்டும், யாருடன் வணிகம் செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது.
மோடி அரசின் நேரெதிர் வெளியுறவுக் கொள் கையும் தளர்வான நிலைப்பாடும் தான் இந்த அவ மானத்திற்கு முக்கிய காரணம். சுதந்திர வெளியுற வுக் கொள்கையை முழுமையாக கைவிட்டு, அமெரிக்காவின் காலடியில் விழும் அடிமைத்தன நிலைப்பாட்டால் இந்தியாவின் தன்மானமும் கௌரவமும் சிதைக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு ஓடும் இந்த அரசு நாட்டின் கவுர வத்தையே களங்கப்படுத்தியுள்ளது.
குவாட், ஆக்கஸ், ஐ2யு2 போன்ற இராணுவக் கூட்டணிகளில் இந்தியாவை இழுத்துவிட்டு, பின்னர் அதன் சுயேச்சையான வெளியுறவுக் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்கும் அமெ ரிக்காவின் கபட நடவடிக்கை அம்பலப் படுத்தப்பட வேண்டும்.
இந்தியா எண்ணெய் தேவைக்காக ரஷ்யாவு டன் வணிகம் செய்வது அவசியமான பொருளா தார நடவடிக்கையாகும். அதில் இந்தியாவின் எளிய மக்களுக்கு லாபம் இல்லை; அம்பானி, அதானிக்கே லாபம் என்பது உண்மையே; அது உள்நாட்டுப் பிரச்சனை. ஆனால் அமெரிக்கா இதை “உக்ரைன் போருக்கு நிதியுதவி” என்று திரித் துரைக்கும் அபத்தமான குற்றச்சாட்டு ஏகாதி பத்தியத்தின் வெட்கக்கேடான அரசியலைக் காட்டுகிறது.
வணிக நலன்களுக்காகவும், தனது மேலா திக்கத்தை நிலைநாட்டவும்இந்தியாவை இன் னொரு நாட்டின் போரில் சிக்க வைக்க முயலும் இந்த கொடூரமான ஏகாதிபத்திய சூழ்ச்சியை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில், இந்த சூழ்நிலையை உருவாக்கிய மோடி அரசின் பலவீனமான வெளி யுறவுக் கொள்கையும் கண்டிக்கப்பட வேண்டும்.