அமெரிக்காவில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ.2,029 கோடி அளவிற்கு லஞ்சமாக தர முன்வந்ததாக பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பரான கவுதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொ டர்பாக நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்க ளைப் பெற அதானி பல்லாயிரம் கோடி லஞ்சம் தர முன் வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை நியூயார்க் நீதிமன்ற நீதிபதி உறுதி செய்துள்ளார். மேலும் இந்த வழக்கில் அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதானி மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிந்துள்ளது. நாட்டையே திடுக்கிடச் செய்துள்ள இந்த குற்றச்சாட்டு குறித்து நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு உரிய நட வடிக்கை எடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது. அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்தது தொடர்பாகவே மோடி அரசு கவலை கொள்ளுமே யன்றி, அதானி என்ற கார்ப்பரேட் முதலாளியின் களவாணித்தனம் காரணமாக இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் சரிந்தது குறித்து ஒன்றிய ஆட்சியாளர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
ஹிண்டன்பர்க் ஆய்வு அமைப்பு, அதானி நிறுவனத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டு களை முன் வைத்தபோது, இதுகுறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தின. ஆனால் அதானிக்காக நாடாளு மன்றத்தையே முடக்கிய மோடி அரசு கடைசி வரை உரிய விசாரணை நடத்த ஒப்புக் கொள்ளவே இல்லை.
தற்போது வெளிவந்துள்ள அதானி மீதான மோசடி மற்றும் லஞ்ச ஊழல் புகார் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையையும் மோடி அரசு ஏற்குமா என்பது கேள்விக்குறியே.
இந்தப் புகாரில் அதானி மட்டுமின்றி செபி தலைவராக இருந்த மாதவி மீதும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. ஆனால் மாதவி மீது ஏற்கெனவே வந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் உரிய விசாரணை நடத்தி அவர் தண்டிக்கப்படவில்லை. தற்போதும் அவர் மீது உரிய விசாரணைக்கு மோடி அரசு முன்வருமா என்று தெரியவில்லை.
அதானி நிறுவனம் அமெரிக்க வங்கிகளி டமும், முதலீட்டாளர்களிடமும் தனது சட்ட விரோத செயல்களை மறைத்து முதலீடுகளைப் பெற்றுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு மிகவும் கடுமை யானதாகும். இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகாரை அமெரிக்க நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது. இந்தப் பிரச்சனை யில் நாட்டின் கவுரவத்தை மோடி அரசு காப்பாற்றப் போகிறதா; அல்லது வழக்கம் போல தன்னுடைய கூட்டுக்களவாணி அதானியை காப்பாற்றப் போகி றதா என்பதுதான் நாட்டு மக்கள் முன்வைக்கும் கேள்வி.