ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர் பெர்க், வாரன் பப்பேட் மற்றும் லேரி எல்லிசன்... இந்த ஐந்து பேர்தான், உலகையே உலுக்கியுள்ள கொரோனா பாதிப்பிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தங்களது லாபத்தை 19 சதவீதம் அதிகமாக்கிக் கொண்டு தங்களது ஒட்டுமொத்த சொத்தில் 75.5பில்லியன் டாலர் அளவுக்கு மேலும் கூடுதலாக குவிக்க முடிந்தவர்கள். உலகின் முதல் 5 பெரும் பணக்காரர்கள் - மகா கோடீஸ்வரர்கள் - பிரம்மாண்டான கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள் இவர்கள். அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இதே அமெரிக்காவில்தான் ஏற்கெனவே கடந்த 10 வார காலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக வேலை இழந்த 4.8 கோடி தொழிலாளர்களுடன் மே கடைசி வாரத்தில் மேலும் 21 லட்சம் தொழிலாளர்கள் இணைந்திருக்கிறார்கள்.
அமெரிக்க தொழி லாளர் துறை வெளியிட்டுள்ள இந்த அதிகாரப் பூர்வ தகவலை விட இன்னும் வேலை இழந்தோர், வேலை பறிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையின்படி, அமெரிக்காவின் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் 42சதவீத வேலைகள் காணாமல் போய் இருக்கின்றன; அதாவது 42சதவீத தொழிலாளர்கள் வேலையி லிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்; அவர் களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் வாய்ப்பு இல்லை. இன்னும் அதிர்ச்சிகரமான தகவல் என்ன வென்றால் அமெரிக்காவின் உழைப்புப் படையில் இருக்கிற 16.45 கோடி தொழிலாளர்களில் 24.7சதவீதம் பேர் வேலை வாய்ப்பற்றவர்களாக வீதியில் நிற்கிறார்கள்.
அந்நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் என்பது ஏப்ரலில் 14.7சதவீதமாக இருந்தது, ஒரே மாதத்தில் கடுமையாக அதிகரித்து மே இறுதியில் 20 சதவீதமாக மாறி யுள்ளது. 1930களில் ஏற்பட்ட உலகப்பெருமந்தக் காலத்தில் இருந்த நிலையைவிட கடுமையான சூழல் எழுந்துள்ளது. இதேநிலைதான் உலகின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மறுபுறத்தில், தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, ஊரடங்கு காரணமாக உற் பத்தி முடங்கியிருக்கும்போதிலும் கூட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபம் குறைய வில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. அது எப்படி சாத்தியம் என்பதுதான் முக்கியமானது.
அமெரிக்கா உள்பட உலகின் பல அரசுகளும் ஊரடங்கு காலத்திற்கான மீட்பு நிதி என்ற பெய ரில் பல லட்சம் கோடி டாலர்களை அறிவித்துள் ளன. ஆனால் இந்த மீட்புநிதி, வேலையிழந்த உழைப்பாளிகளுக்கானது அல்ல; மாறாக லாபம் குறைந்துவிடுமோ என்று அஞ்சிய கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கானது. அரசுகள் ஒதுக்கி யதும் இவர்களுக்காகத்தான். இந்தத் தொகை யைத்தான் முதலில் குறிப்பிட்ட 5 கார்ப்பரேட்டு கள் மட்டுமின்றி இந்தியாவின் அம்பானி, அதானி உள்ளிட்ட மகா கோடீஸ்வரர்களும் அள்ளியிருக் கிறார்கள். கொரோனாவின் பெயரில் குவிக்கப்படும் மூலதனம் இது.