headlines

img

வாழ்வா சாவா போராட்டம்!

மத்திய பாஜக அரசு, இந்தியாவின் அரசி யலமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் முற்றாக ஒழித்துக் கட்டும் விதத்தில், மொத்த முள்ள 44 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத்தொகுப்புகளாக மாற்றும் கொடிய சுரண்டல் ஆதரவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, “தொழிலக உறவுகள் சட்டத் தொகுப்பு மசோதா 2019” மக்களவையில் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.  முதலாளிகள் விருப்பம்போல் தொழி லாளர்களை அமர்த்தவும் துரத்தவும் இம் மசோதா சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கிறது.  இதற்கு முன்பு சட்டவிதிகளின் குறிப்புகளில் ஒன்று என்ற அளவில் மட்டும் வகைப்படுத்தப் பட்டிருந்த “குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமான வேலைவாய்ப்பு (பிக்சட் டெர்ம் எம்ப்ளாய் மெண்ட்)” என்பதை சட்டத்தின் ஒரு பகுதியா கவே மாற்றவும் இந்த மசோதா வழி செய்கிறது. 

1926 இந்தியத் தொழிற்சங்க சட்டம், தொழிலா ளர் நிலையாணைச் சட்டம்  மற்றும் 1947 தொழில் தாவா சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒரே தொகுப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மசோதா, தொழிற்சங்கங்கள் அமைப்பதையே முற்றாக தடுக்கிறது. ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு ஆலையில் பட்டியலில் உள்ள தொழிலாளர்க ளில் 75 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான தொழிலாளர்களது ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அறிவிக்கப்படும் என்று மசோதா குறிப்பிடுகிறது. இது இன்றைக்கு தொழிலாளர் நலனுக்காக போராடிக் கொண்டிருக்கும் மத்திய தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட எந்தவொரு சங்கத்தையும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக ஏற்றுக்கொள்ளா மல், தொழிற்சங்கங்களை ஒழித்துக் கட்டும் நோக் கத்துடன் கூடிய மிக மோசமான ஷரத்து ஆகும்.

அதேபோல, 300 தொழிலாளர்கள் வரை உள்ள தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள், எந்த  நேரத்திலும் நட்டக்கணக்கு காட்டி தொழிற் சாலையை மூடவோ, ஆட்குறைப்பு செய்யவோ, தொழிலாளர் உரிமைகளை பறிக்கவோ அரசின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் கோருவதற்கும் இந்த மசோதா வழி செய்கிறது. இந்த நோக்கத்துடன் ஏற்கெனவே ராஜஸ்தான், உத்தர்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிர தேசம், ஜார்க்கண்ட், ஹரியானா, அசாம் போன்ற பாஜக ஆண்ட, ஆளும் மாநில அரசுகள் நிறை வேற்றிய தொழிலாளர் விரோத சட்டங்களை இந்த மசோதா அங்கீகரிக்கிறது. 

அதேபோல வேலைநிறுத்த உரிமை உள்ளிட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை இம்மசோதா முற்றாக நிராகரிக்கிறது.

இந்திய தொழிலாளி வர்க்கத்தின் மீது கொடூர தாக்குதலாக முன்மொழியப்பட்டுள்ள இம்மசோ தாவுக்கு அறிமுக நிலையிலேயே இடது சாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொது நீரோட்ட ஊடகங்களுக்கு, இது வெறுமனே ஒரு நாலுவரிச்செய்தி. ஆனால் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு இது வாழ்வா, சாவா போராட்டம். 

தொழிலாளர் வர்க்கமே எழுக!