2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் திங்களன்று துவங்கியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரை யுடன் துவங்குவது வழக்கம். வழக்கம் போல ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருக்கிறார். தேசிய கீதம் அவ மதிக்கப்பட்டு விட்டதாக பின்னர் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூட சமூக ஊடகத்தில் பதிவிடப் பட்ட பின்பு அவசரமாக நீக்கப்பட்டு சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவிடப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைக் கூட்டம் துவங்கும் போது நீராரும் கடலுடுத்த எனத் துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதன் பின் நம்முடைய நாட்டின் தேசிய கீதமான ஜன கன மன பாடலும் இசைக்கப் படுவது வழக்கம். இது குறித்து ஆளுநர் ஏற்கெனவே விளக்கம் கேட்டிருக்கிறார். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என ஆளுநர் கூற, அதற்கு மாநில அரசு தரப்பில் உரிய விளக்க மும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாநில அரசின் சார்பில் தயாரிக்கப் பட்ட கொள்கை விளக்க குறிப்பை வாசிக்காமல் இருப்பதற்கு சாக்குத் தேடிய ஆளுநர், தேசிய கீதத்தை அவமதிப்பதாகக் கூறி அலறியடித்து வெளிநடப்பு செய்திருக்கிறார். இதன் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் அவர் ஒருசேர அவமதித்திருக்கிறார். ஏற்கெ னவே ஒரு முறை தேசியகீதம் இசைக்கப்படுவ தற்கு முன்பே ஆர்.என்.ரவி அவசர கதியில் வெளி யேறியது இங்கு நினைவு கூரத்தக்கது.
ஆர்.என்.ரவி ஒரு அக்மார்க் ஆர்எஸ்எஸ் தயாரிப்பு. ஆர்எஸ்எஸ் இயக்கம் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் ஜன கன மன பாட லையே ஏற்பதில்லை. ஆனால் ஏதோ தேசிய கீதத்தின் மீது அளவற்ற பற்று உள்ளவர் போல ஆர்.என்.ரவி காட்டிக் கொள்வது வெறும் நடிப்பே ஆகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன் றத்தையும், அதன் மரபுகளையும் மதிக்காதவ ராக ஆளுநர் ரவி செயல்படுகிறார். போட்டி அர சாங்கத்தை நடத்த முயல்கிறார். கடந்த ஆண்டு களில் ஆளுநர் உரையின் சில பகுதிகளை படிக்க மறுத்தும், சிலவற்றை சேர்த்துப் படித்தும் சர்ச்சையை உருவாக்கினார். பதவிக்காலம் முடிந்தபிறகும், அறிவிப்பின்றி ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக தொடர ஒன்றிய அரசு வகை செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழ் நாட்டையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பது இது முதன் முறையல்ல. ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் அலுவலகம் போல மாற்றி அன்றா டம் வம்பு வளர்ப்பதையும், மாநில அரசுக்கு எதி ராக கம்பு சுற்றுவதையும், திருவள்ளுவர், வள்ள லார் போன்ற வரலாற்று ஆளுமைகளுக்கு காவிச் சாயம் பூசுவதையுமே தன்னுடைய அரசியல் சட்டக் கடமைகளாக அவர் கருதுகிறார் போலும். இனியும் ஆளுநர் பொறுப்பில் தொடருவதற்கு ஆர்.என்.ரவிக்கு அருகதை இல்லை.