பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் பொய் பேசுவதையே வழக்கமான ஒன்றாக மாற்றிக்கொண்டுள்ளனர். யார் கேட்கப்போகி றார்கள் என்று வரலாற்றை திரித்துக் கூறுவது, அரசின் சாதனை என்ற பெயரில் பொய்யான புள்ளி விவரங்களை அவிழ்த்து விடுவது அவர்க ளின் வாடிக்கையாக உள்ளது. இப்படித்தான் அருப்புக்கோட்டை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரி வித்ததால், அத்திட்டம் கைவிடப்பட்டது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உண்மைக்கு மாறான தகவலை கூறினார்.
ஒன்றிய அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டுதான் பேசுவார்கள். ஆனால் பாஜக அமைச்சர்கள் தெரிந்தும் உண்மையை பேச மறுக்கிறார்கள். அருப்புக்கோட்டை -தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.100 கோடியும் வழக்கமான பட்ஜெட்டில் ரூ.18 கோடியும் ஒதுக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் ரயில்வே அமைச்சரின் அபாண்டமான குற்றச்சாட்டு கடும் கண்ட னத்திற்கு உரியது.
தாம் பேசியது தவறானது எனத் தெரிந்த பின்னரும் ஒன்றிய அமைச்சர் வருத்தம் தெரி விக்கவில்லை. மாறாக தனுஷ்கோடி என்று ஏதோ ஒன்றை கூறி மழுப்புகிறார். இது மட்டுமல்ல, ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும் தமிழகத்தை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. ஏற்கனவே கடந்த பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு குறை வான நிதியே ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் 11- புதிய பாதைகளுக்கு 976.1 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. வழக்கமான பட்ஜெட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. மேலும் புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ. 674.8 கோடி வெட்டப்பட்டது. பொதுபட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு - புத்தூர், ஈரோடு - பழனி, சென்னை -கடலூர் - மகாபலி புரம், ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி - இருங் காட்டுக் கோட்டை - ஆவடி - ஸ்ரீபெரும் புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்களில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அதேபோல், தமிழ கத்திற்கான இரட்டைப் பாதைத் திட்டங்க ளுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவுக்கு ஒன்றிய அரசு குறைத்தது. இப்படி யாக தமிழகத்திற்கு ஒன்றிய அரசு இழைத்த துரோகத்தை எடுத்துக்கூற வேண்டும் என்றால் ஒருநாள் போதாது.