headlines

img

நடுங்க வைத்த நாள் இன்று...

பாபர் மசூதியை இடித்து 27 ஆண்டுகள் பறந்தோடி விட்டன. குற்றவாளிகள் யார் யார்? அந்த வன்முறைக்குத் தலைமை தாங்கியவர் கள் யார்? என்பதையும் நாடே அறியும். பட்டப் பகலில் பகிரங்கமாகவே பலநூறு ஆண்டுகள் பெருமை மிக்க மசூதி இடித்து தரைமட்டமாக் கப்பட்டது. இடித்தவர்கள் மதச்சார்பற்ற முறை யில் நடந்துகொள்வேன் என்று அரசியல் சாசனத் தின் மீது உறுதி ஏற்று மிகப்பெரிய பதவியில் இருந்தவர்கள்தான்.

ஒருவர் பின்னர் துணைப்பிரதமராக இருந்தார். மற்றொருவர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர். நாட்டில் ரத்தக்கறை படிந்த அநாகரி கமான செயல் என்று வரலாறு வழிநெடுகப் பேசிக் கொண்டே இருக்கப் போகிறது. இப்பொழுது வழங் கப்பட்ட தீர்ப்பில் கூட பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றங்கள் சாதார ணமானவையல்ல; இந்தியாவின் குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 153(பி), 149, மற்றும் 505 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலகம் விளைவித்தல், மக்களிடம் குரோத உணர்ச்சியைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப் பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்கு தல் என்கிற குற்றங்கள் இதில் அடங்கும்.

பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்திய லிபரான் ஆணையம் அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, பிரவீன்தொகாடியா, கோவிந்தாச் சார்யா, கல்யாண்சிங் உட்பட 68பேர் குற்றவாளி கள் என்று கூறியிருக்கிறது. குற்றவாளிப் பட்டிய லில் 11 அதிகாரிகளும் உள்ளனர்.

இவ்வளவு இருந்தும் வழக்கு அப்படியே கிணற்றில் போடப்பட்ட கல்லாகக் கிடக்கிறது அந்த ஆணையத்தின் அறிக்கை. பெரிய தலை வர்கள், பெரிய மனிதர்கள் என்று கூறப்படுப வர்கள் உலகமே வெட்கித் தலைக்குனியும் மிகப் பெரிய வன்முறையில் ஈடுபட்டதால்  தீர்ப்பும்,  தண்டனையும் கடுமையாக இருந்து தீர வேண்டி யது மிகமிக அவசியமாகும்.

முக்கிய குற்றவாளியான அத்வானி உள்ளிட் டோரை ரேபரேலி நீதிமன்றம் விடுவித்ததுதான் வேதனை. அலகாபாத் உயர்நீதிமன்றமும், அதற்குத் துணை போனதுதான் கொடுமையிலும், கொடுமை. உச்சநீதிமன்றத்தின் ஆணையால் அவர்கள் தப்பிக்க முடியவில்லை. வழக்கை ஈராண்டுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் ஆணை யிட்டும் பலனில்லை.

பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பான வழக்கை 40 நாள்களில் நடத்தித் தீர்ப்பு  வழங்கப்பட்டது போல, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கினையும் அதிவேகத்தில் நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மதுரா,ஆக்ரா, காசி என அடுத்தடுத்து மசூதிகளை இடிக்க கடப்பாறை யோடு புறப்பட்டு விடுவார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் சட்ட மும், நீதியும், நபர்க ளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் தன்மையே என்றாகி விடும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் மூலமாகத்தான் மதவாத பித்தத்துக்கும், வன்முறை வெறிகளுக்கும் ஒரு தடுப்பணையை ஏற்படுத்த முடியும்.