headlines

img

வெறுப்பைத் தூண்டுவது யார்?

பிரதமருக்கும் பாஜகவுக்கும் எதிராக ராகுல் காந்தி வெறுப்புணர்வை தூண்டுவதாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால் நடப்பு என்ன என்பது நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் நன்றாகத் தெரியும். அதனால் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் குறித்து பாஜகவும் ஒன்றிய ஆட்சியாளர்களும் அச்சம் கொண்டிருக்கிறார்கள் என்பது ராஜ்நாத்சிங்கின் குற்றச்சாட்டிலிருந்து, அல்ல அல்ல புலம்பலில் இருந்து தெரிகிறது.

இந்தியா பல்வேறு மதங்கள், மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் கொண்ட துணைக் கண்டம். இது வேற்றுமையில் ஒற்றுமை, நல்லி ணக்கம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் மூலம் தான் நீடித்து நிலைத்திருக்கிறது. ஆனால் இத்த கைய பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்ளாத இந்துமத வெறி கொண்ட ஆர்எஸ்எஸ்- பாஜக பரிவாரங்கள், ஒற்றைத் தன்மையை திணித்து ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்று சிறுமைப் படுத்தி மக்களை சின்னாபின்னமாக்க முயற்சிக் கின்றன. அவர்களது வெறுப்புணர்வு முயற்சி வெற்றி பெறாது.

அதன் வெளிப்பாடுதான் அன்பின் செய்தியை கொண்டு செல்வதாகக் கூறி ராகுல், நடை பயணம் மேற்கொண்டுள்ளது பாஜகவின் கண்க ளுக்கு வெறுப்புணர்வு பிரச்சாரமாகத் தெரிகிறது.

பிரதமர் வெறுப்புணர்வைத் தூண்டுகிறாரா என்று ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குச் சரியான பதிலாகத்தான் 2002ஆம் ஆண்டு குஜராத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு ஆவ ணப் படங்களை வெளியிட்டுள்ளது. ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற அந்த ஆவணப் படம் உலகம் முழுவதும் எழுப்பியுள்ள அதிர்வலை களைக் கண்டு அஞ்சியே ராஜ்நாத்சிங் இத்தகைய கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு அந்த ஆவணப் படமே தெளிவான பதில்.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் அன்றைய பிரதமர் வாஜ்பாய், இனி எந்த முகத் தோடு வெளிநாடு செல்வேன் என்று புலம்பிய தும் மோடி அமெரிக்கா செல்ல பல ஆண்டுகள் விசா மறுக்கப்பட்டதும் வரலாற்றுப் பதிவுகள். அண்மையில் கூட பாஜக எம்.பி., பிரக்யாசிங், இந்துக்கள் தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக்  கொள்ளுங்கள். கத்திகளை கூர்மை யாக்கிக் கொள்ளுங்கள் என்று பேசினாரே, அது அன்பை விதைக்கும் பேச்சா?

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சாமி யார்கள் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களை கொல்லுங்கள் என்று கொக்கரித்தது அன்பின் வழியா? பாஜக ஆளும் உ.பி.யிலும் மற்ற மாநிலங்க ளிலும் புல்டோசர்கள் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பது அன்பைப் போதிப்பதா? ஹிஜாப்பின் பெயரால் முஸ்லிம் பெண்களின் கல்வியைப் பறிப்பதும், ஜெய்ஸ்ரீராம் என்று  சொல்லாத  முஸ்லிம் இளைஞனை அடித்துக் கொல்வதும் அன்பைப் பரப்புவதா? வெறுப்பு ணர்வைத் தூண்டி வெறுப்பின் விளைச்சலை அறு வடை செய்தே பழக்கப்பட்ட பாஜக இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியது.

;