குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெற இருப்பதையொட்டி, எதிர்க்கட்சி கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த லாம் என்ற யோசனை எழுந்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக ஜூன் 15 அன்று எதிர்க்கட்சி களின் கூட்டத்தை நடத்திட காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று எதிர்க் கட்சித் தலைவர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஆனால் திடீரென மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அதே ஜுன் 15 அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருப்பதாகவும் அதில் பங்கேற்க வருமாறும் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது எதிர்க்கட்சி களிடையே குழப்பத்தையும் தேவையற்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
மம்தாவின் இத்தகைய ‘ஊடுசரடு’ வேலை முற்றிலும் தன்னிச்சையானது என்று இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான சீத்தாராம் யெச்சூரியும், து.ராஜாவும் உடனடியாக விமர்சித்து ள்ளனர். எட்டாண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய நாடுஎதிர்கொண்டு வரும் துன்பதுயரங் களுக்கெல்லாம் முடிவுகட்ட, எதிர்வரும் 2024 பொதுத் தேர்தலிலும், அதற்கு முந்தைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் பாஜகவின் நகர்வுகளுக்கு எதிராக நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்ட வேண்டியது மிக மிக முக்கிய மானதாகும். ஆனால் ஒவ்வொரு முறையும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு நிலையை முன்வைத்தாலும் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒன்றுபட்ட நகர்வுகளுக்கு இயைந்த விதத்தில் செயல்படாமல் தனி ஆவர்த் தனம் வாசித்து வருகிறது.
திரிணாமுல் காங்கிரசின் இத்தகைய நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது 23வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மா னத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது: “திரிணாமுல் காங்கிரஸ் ஏற்கெனவே பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்த கட்சியாகும். இன்றைக்கு அக்கட்சி, பாஜகவை எதிர்த்து குரல் கொடுப்ப தாகக் கூறுகிறது. ஆனால் அதேவேளையில் மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சிக்கு எதிராகவும் இடதுசாரிகளுக்கு எதி ராகவும் மிகவும் மோசமான முறையில் தாக்கு தல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. மேலும், தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு சக்திகளுக்கு தானே தலைமையேற்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது”.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை யும் ஒன்றிணைப்பதில், காங்கிரசைவிடவோ, இடதுசாரிக் கட்சிகளைவிடவோ திரிணாமுல் கட்சியால் எந்தவிதத்திலும் ஆக்கப்பூர்வமான பங்கினை ஆற்ற முடியாது என்பதே எதார்த்த நிலையாகும். மாநிலத்தில் திமுகவைப் போலவோ ஆர்ஜேடி மற்றும் சமாஜ்வாதி போலவோ திரிணா முல் கட்சி பாஜகவுக்கு எதிரான அனைத்து சக்தி களையும் ஒருங்கிணைத்துச் செல்கிற கட்சியும் அல்ல, எனவே ஒரு பெரும் தேசிய அரசியல் கடமையில் குறுக்குசால் ஓட்டுவதை மம்தா பானர்ஜி கைவிட வேண்டும்.