கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு 2019ஆம் ஆண்டு நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை யும் பெற்றது. இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.
எனவே இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதி கள் ஆறுமாதங்களுக்குள் வெளியிடப்பட வேண்டும். அல்லது நாடாளுமன்ற குழுவிடம் கால நீட்டிப்பு பெற வேண்டும். இதன் அடிப்படை யில் 2020லிருந்து இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த கால நீட்டிப்பு கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அவகாசம் பெற்று வந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சட்டம் நிறை வேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து இஸ்லாமியர்கள் புனித ரமலான் நோன்பை துவங்கும் நாளன்று இந்தச் சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான அறிவிக்கை வெளி யிடப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட தாக மோடி அரசினால் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரக் களத்தை மதக் கண் ணோட்டத்தின் அடிப்படையில் மாற்றும் தங்க ளது உத்தியின் ஒரு பகுதியாகவே இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் தேர் தல் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை அடைந்தி ருக்கும் நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத் தின் கீழ் 14 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை செயலாளர் இந்திய குடியுரிமையை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் ஏன் இந்த அவசர நடவடிக்கை என்ற கேள்வி எழுகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எத்தனையோ பேருக்கு இந்திய குடி யுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா வந்துள்ள தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கு வதை இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்க மறுக்கிறது.
ஒருபுறத்தில் பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறிப் பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளனர். மறுபுறத்தில் இஸ்லாமிய மக்களை ஒதுக்கி வைக்கும் சட்டத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் செயலை ஒன்றிய உள் துறை அமைச்சகம் செய்கிறது. உண்மையில் பலரது குடியுரிமையை பறிக்கும் கொடுவாளாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ரத்து செய்யப்பட வேண்டும்.