headlines

img

கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு!

“பெண்களுக்கான வளர்ச்சி என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற பாதையை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது’’ என்று  ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். ஆனால்  உண்மையில் இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதைத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

கடந்தாண்டு மட்டும் பெண்களுக்கு எதிரானக் குற்றங்கள் தொடர்பாக 4,28,954 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது 2016ஆம் ஆண்டு டன் ஒப்பிடுகையில் 26.35 சதவிகிதம் அதிகமாகும். அதில் முதலிடம் வகிப்பது பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் ஆகும். அங்கு மட்டும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கி றது. கடந்த 8 ஆண்டுக் காலத்தில் பெண்களுக்கு  எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்திருக் கின்றன. அதாவது ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் பெண்களுக்கு எதிரான ஒரு குற்றம் பதிவு செய்யப் படுகிறது. 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தும் பெண்களுக்குச்  சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டை ஏன் நிறைவேற்ற வில்லை.  இதுதான் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியா? மோடி பிரதமராகப் பதவியேற்ற 2014ஆம் ஆண்டு அவரது சுதந்திர தின உரையில், “இந்தியாவில் நடைபெறும் பாலியல் வல்லுறவுக ளால் வெட்கத்தால் தலைகுனிய வேண்டியுள் ளது” என்று குறிப்பிட்டார். ஆனால் மோடியின் ஆளுமையில் கடந்த 8 ஆண்டுகளில் எப்போ தும் இல்லாத அளவிற்கு பாலியல் வல்லுறவு குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்கின்றன புள்ளி விவரங்கள்.

கடந்தாண்டு மட்டும் 31,878 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 3,725 அதிகமா கும்.  சமீபத்தில் கூட குஜராத்தில் பில்கிஸ் பானுவைக் கும்பல் பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி களை பாஜக விடுதலை செய்ததுடன், இனிப்பும் வழங்கி கொண்டாடியது.  காஷ்மீர் கத்துவா மாவட் டத்தில்  8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளை விடுவிக்கக் கோரி தேசி யக்கொடியுடன் பேரணி நடத்தியது இதே பாஜக வினர்தான்.  மோடி முதலில் பெண்கள் மீதான தனது கட்சிக்காரர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதுதான் பெண்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கும்.

மதத்தை முன்னிறுத்தும் எந்த ஆட்சியும் பெண்களின் உரிமையைப் பாதுகாத்ததாக வரலாறு இல்லை. அது போல் இந்து மதத்தை முன்வைத்து சனாதனத்தை நிலை நிறுத்த துடிக்கும் பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசால் ஒரு போதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. 

பெண்களின் உரிமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென்றால், முதலில் அகற்ற வேண்டியது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசைத்தான்.

;