வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில், இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாகுபாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நீங்கள் ஒரு பாகுபாட்டைக் கூட எனக்கு காட்ட முடியாது என்று மறுக் கிறேன்; இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை என்று முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முயன்றிருக் கிறார்.
அவரது கருத்துக்கு கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. “வெளியுறவு அமைச்சர் அவர்களே, நீங்கள் எந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்; உங்களது அரசின் - பாஜகவின் - நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதூரி, நாடாளுமன்ற கூட்டத்திலேயே பகிரங்கமாக ஒரு இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்து மிக மிக இழிவான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துள்ளாரே; நீங்கள் ஆளும் மாநிலங்களில் வீதிகளில் நடந்து கொண்டிருந்த சிறுபான்மை மக்களுக்கு எதி ரான கொடிய தாக்குதல்களும் பாகுபாடுகளும் நாடாளுமன்ற அவையிலேயே - நாடே பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரங்கேற்றப்பட்டி ருக்கிறதே; இதைவிட பாகுபாட்டிற்கு என்ன உதாரணம் வேண்டும்?” என்று சமூக ஊட கங்களில் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல; பிரசாந்த் பூஷண், ராணா அயூப் போன்ற செயற்பாட்டாளர்களும் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்புப் பேச்சுக்கள் பற்றிய புள்ளிவிபரங்களும் வெளி யாகியுள்ளன. 2023ன் முதல் ஆறு மாதத்தில் மட்டும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வெறிப் பேச்சுக்கள் மொத்தம் 255 பதிவாகியுள்ளன. இவற்றில் 190 பேச்சுக்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் பதி வானவை. இதில் “சிறுபான்மையினரைக் கொல்லுங்கள்” என்று பகிரங்கமாக வெறி யூட்டப்பட்டு, கொலைவெறித் தூண்டப்பட்ட நிகழ்வுகள் மட்டும் 62. இவை அனைத்துமே பாஜக நிர்வாகிகளால்தான் பேசப்பட்டுள்ளன.
அரசியல் அதிகாரத்தை முழுக்க முழுக்க மதவெறியைத் தூண்டுவதற்கும் இஸ்லா மிய, கிறிஸ்தவ, சீக்கிய மற்றும் இதர பல்வேறு சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தாக்குதல்களையும் பாகுபாட்டையும் அதி காரப்பூர்வமாகவே அமலாக்குவதற்கும்தான் பாஜக பயன்படுத்தியிருக்கிறது. மேற்குறிப் பிட்ட ஒரு சம்பவத்தைக் கூட மோடி அரசோ, தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியோ, பாஜக வின் தேசிய தலைவர்களோ பெயரளவுக்குக் கூட கண்டிக்கவில்லை.
இத்தனைக்கும் பிறகும் அமைச்சர் ஜெய்சங்கர், பாகுபாடு இல்லை என்று உலக அரங்கில் போய் சவால் விடுகிறார். அந்த அளவுக்கு எஜமான விசுவாசம்.