headlines

img

அதிர்ச்சி தரும் தகவல்

நாட்டில்  உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72விழுக்காடு பட்டியலின மாணவர்கள்  தங்களின் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். இந்த  அதிர்ச்சியான தகவலை  ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை,கான்பூர் உள்ளிட்ட ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் கல்வி நிலையங்களில் தொடர்ச்சியாக மாணவர்கள்  மர்மமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன. இதைத் தடுப்பதற்கு ஒன்றிய கல்வித்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளும்  மாணவர் சங்கங்களும் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் இந்த தகவல் உயர் கல்விநிறுவனங்களில்  நிலைமை மோசமாக இருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை என்பது மிகக்கொடூரமானது. உலகில் வேறு எங்கும் கேட்டிராதது. உயர்கல்விநிறுவனங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மாணவர்களின் எதிர் காலத்தைச் சிதைத்து வருவதாகக் கல்வியாளர் கள் விடுத்த எச்சரிக்கையை ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை. இதன் விளைவு விலை மதிப்பில்லாத மாணவ செல்வங்களை நாடு இழந்துவருகிறது.  

எதோ காதல் தோல்வியால் அல்லது மதிப்பெண் குறைவாகப் பெற்றுவிட்டதால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளவில்லை.  ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் வாசல்களை மிதிப்பதே பின்தங்கிய குடும்பத்தி லிருந்து வரும் மாணவர்களின் கனவாக இருந்த காலமுண்டு. மண்டல் பரிந்துரைகள் அமலுக்கு வந்த பின்னர் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் உயர் கல்வி கற்கும் நிலையை ஓரளவு எட்டியுள்ளனர்.

ஆனால் அத்தகைய பின்னணியிலிருந்து வந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உயர்கல்வி நிறுவனங்களின் சூழல் இல்லை. மாண வர்களைக் கல்வித்திறனை மட்டும் தட்டும் வகையி லும் சாதிய ரீதியாக  ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் போதும் மாணவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் அரசு, ஆசிரியர்களும் உயர்சாதியைச் சேர்ந்த மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட ஒடுக் கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம்  எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற பயிற்சியை அவர் களுக்கு முதலில்  அளிக்க வேண்டும், 

இந்தநிலையில் கான்பூர் ஐஐடி-யில் நடை பெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்  சவால்களை மாணவர்கள் சந்திக்க நேரிடும் என்று கூறியுள் ளார். பிற சவால்கள் இருக்கட்டும்.  முதலில் உயர் கல்வி நிறுவனங்களில்  மாணவர்கள் சந்திக்கும் சவால்களைக் களைந்தாலே பிற சவால்களை அவர்கள் எளிதாகக் கடந்துவிடுவார்கள். 

“ நம் நாடு வாய்ப்புகளின் சுரங்கமாக உள்ளது’’ என்றும்  பிரதமர் அளந்து விட்டுள்ளார். அரசுத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலை யில் எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லாத தனியார் துறை  வேலைவாய்ப்பு எப்படி வாய்ப்புகளின் சுரங்க மாக இருக்கமுடியும் என்பதைப் பிரதமர் தான் விளக்க வேண்டும்.