headlines

img

ரத்தம் உறிஞ்சும் அதானி

“மூலதனம் என்பது அதற்குள் செத்துப்போன  உழைப்பு என்பதைத் தவிர வேறல்ல; உயிர்ப்புள்ள உழைப்பை மீண்டும் மீண்டும் உறிஞ்சுவதன் மூலமாகவே மூலதனம் வாழ்கிறது; எவ்வளவுக்கு எவ்வளவு மனித உயிர்களையும், அவர்களது உழைப்பையும் உறிஞ்சுகிறதோ அந்த அள விற்கு மூலதனம் உற்சாகமாக வாழ்கிறது”

-மாமேதை மார்க்ஸின் இந்த வார்த்தைகள் முன்னெப்போதையும் விட இப்போது இந்திய தேசத்தில் நம் கண் முன்னால் விரிகிறது. இந்தியா வின் துறைமுகங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், பாதுகாப்பு தளவாடங்கள், மின்சார உற்பத்தி மையங்கள், சிமெண்ட் ஆலைகள், ஹைட்ரோ  கார்பன், பெட்ரோலியம், சமையல் எண்ணெய்,  ஊடகங்கள், டேட்டா மையங்கள், விவசாய  உற்பத்தி, விவசாய கிடங்குகள்... இன்னும் எத்தனை துறைகளில் மொத்த இந்தியாவையும் கையில் வைத்திருக்கிறாரோ கவுதம் அதானி!

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இரண்டு நாட்களுக்கு முன்பு,  புளூம்பெர்க் பத்திரி கையின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் மோடியின் இந்த உற்ற நண்பர். அமேசான் நிறுவனத்தின் தலைவரான - உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற இட த்தில் இருந்த ஜெப் பெசோசைவிட கூடுதலாக சொத்துக்களைக் குவித்து அதானி சாதனை படைத்துவிட்டதாக கார்ப்பரேட் ஊடகங்கள் கொ ண்டாடி மகிழ்கின்றன. 146.8 பில்லியன் டாலர் சொத்துக்களை குவித்திருக்கிறார் அதானி.

அதானியின் சில நிறுவனங்கள் குறுகிய காலத்தில் 750 மடங்கு லாபத்தை ஈட்டியிருப்ப தாக புளூம்பெர்க் பத்திரிகை தெரிவித்திருக் கிறது. மிகக்குறுகிய காலத்தில் - அதாவது கடந்த இரண்டே ஆண்டுக்காலத்தில் அதானியின் மூலதனக் குவிப்பு 64.8பில்லியன் டாலரிலிருந்து 145 பில்லியன் டாலருக்கும் மேல் அதிகரித்திருக் கிறது. மிக சமீபத்திய இந்த மூலதனக் குவிப்பிற்கு அடிப்படை, உலக அளவிலும் இந்திய அளவி லும் பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரி வாயு விலைகள் மிகப்பெரிய அளவிற்கு அதி கரித்ததுதான் என்று தெரிய வருகிறது. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் ஆகிய இரண்டு பெரும் எரிசக்தி நிறுவனங்கள் மட்டும் 750 மடங்கு  லாபம் குவித்துள்ளன; மேலும் அதானி என்டர் பிரைசஸ் லிமிடெட் மற்றும் அதானி டிரான்ஸ் மிசன் லிமிடெட் (மின்விநியோக நிறுவனம்) ஆகிய இரண்டும் 400 மடங்குக்கும் மேல்  லாபத்தைப் பார்த்துள்ளன. இது தவிர அதானி போர்ட்ஸ், அதானி பவர் ஆகிய நிறுவனங் களும் கொள்ளை லாபம் குவித்துள்ளன.

உலகப் பணக்காரர்களே இதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். இது எப்படி சாத்தியம் என்று புருவம் உயர்த்துகிறார்கள்.  300 மடங்கு லாபம் கிடைக்குமென்றால் மூலதனமானது அதன் உரிமையாளரையே கொன்றுவிடும் என்கிறார் மார்க்ஸ். ஆயிரம் மடங்கு லாபத்திற் காக அதானியின் மூலதனம் மொத்த இந்தியா வையும் படுகொலை செய்து கொண்டிருக்கிறது, கூட்டுக்களவாணி பாஜகவின் ஆட்சியில்!

;