ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் அமைதியாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவால் காரை ஏற்றி நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டனர்.
பட்டப்பகலில் நிகழ்த்திய அந்த படுபாத கத்தை நாடே கண்டித்தது. காணொளிக் காட்சிப் பதிவுகள் வெளியாகி கண்டனங்கள் வலுத்த பின்னே வேறு வழியின்றி ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 பேரை கைது செய்தது உ.பி. காவல்துறை. ஆனால் சிறையில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சிறப்புச் சலுகை கள் வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. ஒன்றிய உள்துறை இணையமைச்சரான அஜய் மிஸ்ரா தன் செல்வாக்கைச் செலுத்துகிறார் என்று கண்டனத்துக்குள்ளானது.
இந்நிலையில் லக்கிம்பூர்கெரி படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகே, உ.பி. அரசு சிறப்புப் புலனாய்வுக்குழு விசார ணையை அறிவித்தது. தற்போது அந்தக்குழு விவ சாயிகள் மீது காரை ஏற்றியது திட்டமிடப்பட்ட சதிச் செயல்தான் என்று கூறியிருக்கிறது.
இந்தப் பின்னணியிலேயே லக்கிம்பூர்கெரி படுகொலை வழக்கு நியாயமாக நடக்க வேண்டு மானால், விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டு மானால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா தானாக பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
சிபிஎம் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிக ளும் இதற்காக குரல் எழுப்பின. நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், திமுக கட்சிகளின் சார்பில், நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் மக்களவை சபாநாயகரோ அதற்கு அனுமதியளிக்க மறுத்து, அவையை நாள் முழு வதும் ஒத்தி வைத்தார். அமைச்சர் பியூஷ்கோயலோ இது குறித்து விவாதிக்க முடியாது என்று ஆணவமாகக் கூறினார்.
இதே சமயத்தில் தான் அமைச்சர் அஜய் மிஸ்ரா சிறைக்குச் சென்று மகனைப் பார்க்கிறார். அங்கே விசாரணைக்குழு அறிக்கை பற்றி கருத்துக் கேட்ட செய்தியாளரை சட்டையைப் பிடித்து உலுக்கி முட்டாள்தனமாக கேள்வி கேட்காதே என்று மிரட்டுகிறார். அதைப் பதிவு செய்த மற்றொரு செய்தியாளரின் மைக்கைப் பறித்து அவரைத் திட்டுகிறார்.
இத்தகைய அமைச்சர் பதவியில் நீடித்தால் லக்கிம்பூர்கெரி படுகொலை விசாரணை எப்படி நியாயமான முறையில் நடைபெறும்? நீதி எப்படி நிலை பெறும்? இத்தனைக்கும் இந்த அமைச்சர்தான், சம்பவத்துக்கு முன்னதாக விவ சாயிகள் மீது வன்முறையைத் தூண்டும் வகை யில் பேசினார்.
அதற்குப்பிறகுதான் அவரது மகன் அந்த திட்டமிட்ட படுகொலையை நடத்தியிருக்கிறார். எனவே அப்பாவி விவசாயிகளின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் அஜய் மிஸ்ரா உடன் அமைச்சர் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.