headlines

img

பாஜகவின் சித்து வேலை ஜார்க்கண்டிலும் தோற்றது

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் பாஜகவின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது. 

தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெறுவது, முடியாமல் போனால் தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் இழுத்து ஆட்சியமைப்பது என்பதை பாஜக ஒரு முழுநேர தொழிலாகவே செய்து வருகிறது. 

சிவசேனை கட்சி எம்எல்ஏக்கள் சிலரை வளைத்துப்பிடித்ததன் மூலம் மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணி அரசை கவிழ்த்து அவக் கேடான முறையில் ஆட்சியமைத்தது பாஜக. ஏற்கெனவே கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இதே பாணியில் தனது சித்து வேலையை அரங் கேற்றியது பாஜக.

அடுத்து பீகாரில் நிதிஷ்குமார் தலைமையி லான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதன் மூலம் அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை அரங்கேற்ற முயல்கிறது பாஜக. ஆனால் நிதிஷ்குமார் அரசு ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்தது.

அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசை கவிழ்க்க முயன்றது பாஜக. அத னால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்எல் ஏக்கள் 30 பேர் சத்தீஷ்கர் மாநிலத்திற்கு கொண்டு சென்று ராய்ப்பூரில் பாதுகாப்பாக தங்க வைக்கப் பட்டனர்.

இந்நிலையில் சட்டப் பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். தங்களது முயற்சி முழுமை பெறாத நிலையில் பாஜகவினர் சட்டமன்றத்தை புறக்கணித்தனர். 81 பேர் கொண்ட சட்டப் பேர வையில் 48 வாக்குகள் பெற்று ஹேமந்த் சோரன் அரசு வெற்றி பெற்றுள்ளது.

எனினும் இத்துடன் தனது கவிழ்ப்பு வேலையை பாஜக நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆளுநரையும், தேர்தல் ஆணையத்தையும் தனது குறுகிய நோக்கத் திற்கு பயன்படுத்திக் கொள்ள பாஜக தயங்காது. ஹேமந்த் சோரனை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படு கிறது. ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து தன்னுடைய காரியத்தை பாஜக நிறைவேற்றிக் கொள்ள முயலும்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஜனநாய கத்தை மிக மோசமாக கீழிறக்கம் செய்து கொண்டி ருக்கிறது பாஜக. மறுபுறத்தில் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய பேசுவதில் மட்டும் குறையில்லை. பாஜகவின் இழி முயற்சிகளுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம் இது.