சென்னையில் மிக்ஜம் புயலுக்குப் பின்னர் பாதிப்புகள் குறித்து பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. எப்போது மழை வந்தா லும் பாதிக்கப்படும் பகுதிகள் என்று வழக்கமாக அறியப்படும் பகுதிகள் இந்த புயலின் போதும் செய்திகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளன. சென்னையில் அதிகம் பாதிக்கப் பட்ட பகுதியாக பள்ளிக்கரணை, ஒக்கியம், துரைப்பாக்கம், முடிச்சூர், வரதராஜநகர், பெரும் பாக்கம், சுனாமி குடியிருப்புகள் மற்றும் பக்கிங்காம், அடையாறு, கால்வாயை ஒட்டி யுள்ள பகுதிகள்.
சென்னையில் உள்ள பெரிய நன்னீர் சதுப்பு நில ஏரி பள்ளிக்கரணை. இந்த ஏரி தனது இயற்கையான இருப்பிடத்தை இழந்து இன்று நான்கில் ஒருபங்காக சுருங்கிவிட்டது. காரணம் சென்னை நகர் விரிவடைந்து வருவதால் வீட்டு மனைகளுக்கான தேவை அதிகரித்தது. இதை பயன்படுத்திக்கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவ னங்கள் ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகளாக மாற்றின. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள தரமணி மற்றும் பழைய மகாபலி புரம் சாலைக்கு மிக அருகாமையில் இந்த ஏரி உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கடந்த 20 ஆண்டுகளில் அழித்து ஆயிரத்துக்கும் மேற் பட்ட இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. இவை அனைத்தும் பத்திரப்பதிவு துறை யில் போலிப் பத்திரம் தயாரிக்கப்பட்டு நீர்நிலைப் பகுதியை குடியிருப்புப் பகுதியாகப் பதிவு செய்து ரியல் எஸ்டேட் முதலாளிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டவை.
வேளச்சேரி, மடிப்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களும் ஒரு காலத்தில் ஏரிக ளாக இருந்தவை. சென்னை நகரின் புறநகர் பகுதிகளாக இருந்த இவை இன்று குடியிருப்புக ளாக மாறிவிட்டன. சிட்லப்பாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பான வழக்கில் நீர்நிலைப் பகுதி இடங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக அறிவிக்க வேண்டும் என 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை அப்போதைய அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. இத னால் மேலும் ஊக்கமடைந்த ரியல் எஸ்டேட் முதலைகள் அரசு அதிகாரிகள் துணையோடு நீர்நிலைகளை மேலும் ஆக்கிரமித்தன. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை எளிதில் பாதிக்கும் பகுதிகளாக அறிவித்து, அங்கு இருக்கும் நீர்நிலைகளின் மீதான மிகப் பெரிய ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். இத னால் 125 டி.எம்.சி நீரை நீர்நிலைகளில் சேமித்து வெள்ள பாதிப்பை தவிர்க்கலாம் என்ற நீரியல் வல்லுநர்களின் யோசனைக்கு செயல் வடிவம் கொடுப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும்.