headlines

img

முன்னெச்சரிக்கையால் பாதிப்பு தவிர்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை இது சென்னை-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில அர சும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது. மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வை யிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாடம் கற்பித்தது. ஒரு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கூட முதலமைச்சரின் அனும திக்காக அதிகாரிகள் காத்திருந்த காலம் அது.  தாமதமாக ஒரே நேரத்தில் ஒருலட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சென்னை மாநகரில் ஏற்பட்ட பேரழிவை தமிழகம் கண்டது. அத்தகைய நிலை இப்போது இல்லை.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு மழை குறைந்ததன் காரணமாக 4000 கன அடி யாக குறைக்கப்பட்டது. மாநில அமைச்சர்க ளும் அதிகாரிகளும் நீர்நிலைகளுக்கு வரும்  தண்ணீர் அளவை ஆய்வு செய்து தேவைப்படும் போது  உபரிநீரை வெளியேற்றி வருவதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னை மாநகருக்கு குடிநீர்வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், செங்குன்றம், தேர்வாய் கண்டிகை ஆகிய முக்கிய ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளன. இதனால் வரும் கோடை காலத்தில் சென்னையில் பொதுவாக ஏற்படும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மாநில அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுத்த முன்முயற்சியின் காரணமாக மழைநீர் வடிகால்பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. இத னால் நகரில் தண்ணீர் தேங்கினாலும் விரைந்து  வடிந்துவிடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் தொடர் மழை யால் கொரட்டூர், செங்குன்றம், மேடவாக்கம், பெரும்பாக்கம், மணலி மாத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள னர். மாநகராட்சி நிர்வாகம் இந்த இடங்களில் தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை மழைக்காலம் முடிந்தபிறகு விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.மழையால் பாதிக் கப்பட்ட மக்கள் குறித்து வருவாய்த்துறையினர் விரைந்து கணக்கெடுப்பு நடத்தி போதிய  நிவார ணம் வழங்க வேண்டும். மின்வாரியத்தின் கவ னக்குறைவு காரணமாக மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இரண்டுபேர் உயிரிழந்திருப்பது கவலை யளிக்கிறது. வரும் காலத்தில் இத்தகைய நிலை தவிர்க்கப்பட வேண்டும்.