செவ்வாய், மார்ச் 2, 2021

headlines

img

திருவிழா - மு.க.இப்ராஹிம் வேம்பார்

எங்க ஊரு திருவிழா
சித்திரை மாதப் பெருவிழா..!
அசைந்து வரும் தேருதான்
அதில் வரும் சாமிதான்..!

வீதியெங்கும் தோரணம்
வண்ண விளக்கு கோபுரம்..!
வீடெல்லாம் குதுகலம்..
திருவிழான்னா கோலாகலம்..!

இராட்டினத்தில் ஏறியே
ஒய்யாரமாய் சுற்றலாம்..!
டில்லி அப்பளம் வாங்கியே
நொறுக்கி நொறுக்கித் தின்னலாம்..!

கண்ணைச் சிமிட்டும் பொம்மையும்
பார்த்து பார்த்துச் சிரிக்குமே..!
கை வளையல் கண்ணாடி
நம்மைச் சுண்டி இழுக்குமே..!

உறவெல்லாம் சேர்ந்துதான்
ஒன்றாய் இங்கே கூடுமே..!
நாங்களுந்தான் அழைக்கிறோம்
நீங்களும்தான் வாங்களேன்..!

;