headlines

img

எச்சரிக்கை, எடப்பாடி அரசே!

இந்திய வரலாற்றில் இதுவரை நிகழாத பிரம்மாண்டமான எழுச்சியை உருவாக்கி வீரகாவியம் படைத்து வருகிறார்கள் விவசாயப் பெருங்குடிகள். பத்து நாட்கள் ஆகிவிட்டன. பல்வேறு மாநிலங்களில் வேறு கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவும் புறவாசல் வழியாக அரியணையில் அமர்வதற்காகவும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சில அரசியல் கட்சிகளையும் கூட பேரம் பேசி இழுக்க முடிந்த அசகாய சூரர்கள் என்று ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களால் வானளாவ புகழப்படுகிற மோடியும்,அமித்ஷாவும், வீறுகொண்டு எழுந்து நிற்கிற இந்திய விவசாயிகளின் முன்பு மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். 

ஐந்து முறை பேச்சுவார்த்தை நடந்து விட்டது. நீங்கள் கொடுக்கிற உணவைக் கூட உண்ணமாட்டோம் என்று, மண்ணின் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் விதமாக மோடி அரசின் முகத்தில் பளார் என்று அறைந்துகாட்டிவிட்டு வெளியேறிவிட்டார்கள் விவசாய சங்கங்களின் தலைவர்கள். சம்யுக்த கிஷான் மோர்ச்சா(ஒன்றுபட்ட விவசாயிகள் விடுதலை) எனும் மாபெரும் எழுச்சியின் ஒரே முழக்கம்... வேளாண் விரோதச் சட்டங்களை ரத்து செய் என்பதுதான்.  அதுவரை போராட்டம் ஓயப்போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக தேசமே எழுந்து நிற்கிறது. நாளைய தினம்(டிச.8) பாரத் பந்த் நடைபெற உள்ளது.

வேளாண் குடிகளுக்கு இந்த சட்டங்கள்  விரோதமானவை என்பதால்தான் ஒட்டுமொத்த வேளாண் குடிகளும் வீதிகளில் திரண்டிருக் கிறார்கள். இந்த சட்டங்கள் மோடி அரசின் கூட்டுக்களவாணிகளான அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளி வகையறாக்களுக்கு மட்டுமே லாபமானவை. இதை இந்தியாவின் எல்லா ஊடகங்களும் வேறு வழியில்லாமல் இப்போது சொல்லத் துவங்கி யிருக்கின்றன.துரதிருஷ்டவசமாக நம்மூர் விவசாயி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் இந்த விபரங்கள் வந்து சேரவில்லை போலிருக்கிறது.புதிய வேளாண் சட்டங்களை முழுமனதோடு ஆதரிக்கிறோம் என்றும், இச்சட்டங்களால் என்ன நஷ்டம் என்றும் அப்பாவியாக கேள்வி எழுப்பி, வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார். அவர் அப்படி கேள்வி எழுப்பிய நாளிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராடும் விவசாயிகள் மற்றும் ஆதரவுப் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது போலீசை ஏவிவிட்டு தாக்குதலும் நடத்தியிருக்கிறார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் என களத்தில் நிற்கும் இடதுசாரித்தலைவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். அமித்ஷாவே ஒன்றும் செய்ய முடியாமல் பேச்சுவார்த்தைக்கு தூதுவிட்டுக்கொண்டிருக் கின்ற நிலையில், தில்லி போராட்டம் ஓயாமல் தமிழகம் உட்பட எந்த மாநிலத்திலும் ஆதரவுபோராட்டங்கள் ஓயாது என்ற உண்மையை எடப் பாடி அரசின் தலையில் குட்டி எச்சரித்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாகதமிழகத்தின் வீதிகளில் போராடும் மக்களைஒன்றும் செய்துவிட முடியாது என்ற எதார்த்தத்தை எடப்பாடி அரசு உணர்ந்தாக வேண்டும்.இங்கு மட்டுமல்ல, இப்போது ஆளும் அரசுகள் எங்குதாக்கினாலும் அது மோடி அரசுக்குத்தான் வினை.

;