games

img

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி!  

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.  

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆடவர் இறுதிப்போட்டியில் இந்திய அணி 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை எதிர்கொண்டது.  

இதில், இந்திய வீரர் லக்சயா சென் முதல் போட்டியில் 8-21, 21-17,  21-16 என்ற புள்ளி கணக்கில்  அந்தோணி கின்திங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இறுதிப் போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.    

அதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இந்திய இணை சாத்விக் - சிராக் இணை வெற்றி பெற்றனர். 3ஆவது போட்டியில் இந்திய அணியின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.        

தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

இதற்கு தமிழக முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

;