ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்
இந்திய மகளிர் அணி சாம்பியன்
மலேசியாவின் முக்கிய நகரான சிலாங்கூரில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின், அணி பிரிவின் மகளிருக்கான இறுதி ஆட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதிய நிலையில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் அணி முதன்முறையாக ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகுடத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.