games

img

காமன்வெல்த் தொடரில் நீரஜ் சோப்ரா விலகல்

ஒலிம்பிக் தங்க மகனும், சமீபத்தில் நிறைவு பெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  உலக சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச்சுற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற சில நாட்கள் ஆகும் என்பதால் காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா பங்கேற்க மாட்டார் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா அறிவித்துள்ளார். சூப்பர் பார்மில் உள்ள நீரஜ் சோப்ராவால் காமன்வெல்த் தொடரில் இந்தியாவிற்கு கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக   நீரஜ் சோப்ரா விலகியுள்ளது இந்தியாவின் பதக்கப்பட்டியலில் கட்டாயம் ஒரு பதக்கம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.