பர்மிங்காம், ஜூலை 31- 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-ஆவது காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரு கிறது. இதில், பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு (தங்கம்), சங்கேத் சர்கார் (வெள்ளி), பித்யாராணி தேவி (வெள்ளி) மற்றும் குருராஜ் பூஜாரி (வெண் கலம்) ஆகியோர் பதக்கங்களை வென்றுள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற பளுதூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடைப் பிரிவில் 19 வயதே ஆன இந்தியா வின் இளம் வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மிசோரமைச் சேர்ந்த இவர், 300 கிலோ (140 கிலோ + 160 கிலோ) எடையை வெற்றிகரமாக தூக்கி பளுதூக்கு தலில் இந்தியாவுக்கு இரண்டா வது தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.