games

img

பிரபல ஓட்டப்பந்தய வீரர் ரெஞ்சுவுக்கு 5 ஆண்டுகள் தடை

கென்யாவைச் சேர்ந்த பிரபல மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் கெனத் ரெஞ்சுவுக்கு ஊக்கமருந்து பயன்படுத்தி யது உறுதியாகியுள்ள நிலையில், சர்வதேச போட்டிகள் உட்பட அனைத்துவிதமான தொடர்களில் பங்கேற்க 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ப்ராக் மினிமாரத்தான் போட்டியில் தடை செய்யப்பட்ட மெதாஸ்டிரோன் என்ற ஊக்கமரு ந்தை கெனத் ரெஞ்சு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் மெதாஸ்டிரோன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், ரெஞ்சுவிற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.