games

img

செரினா வில்லியம்ஸ் அபாரம் - அமெரிக்க ஓபன் டென்னிஸ்

பாகிஸ்தான் - ஹாங்காங்
இடம் : ஷார்ஜா, 
நேரம் : இரவு 7.30 மணி

(இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது). சனியன்று சூப்பர் 4 சுற்று துவங்குகிறது.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.  மகளிர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், தரவரிசையில் 2-வது இடத்தில் எஸ்டோனியாவின் கோன்டாவெயிட்டை 7-6 (7-4), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.  அதிரடிக்கு பெயர்பெற்ற செக்குடியரசின் கெர்ஜிசிகோ வா, செர்பியாவின் அலெக்ஸாண்ட ராவிடம் 6-2, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார். முன்னணி வீராங்கனைகளான கனடாவின் லெய்லா, பிரேசிலின் மாயா ஆகியோரும் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர். 

பெலிக்ஸ் அவுட்

ஆடவர் ஒற்றையர் பிரிவில் போராட்ட குணமிக்க இளம் வீரரான கனடாவின் பெலிக்ஸ் தனது 2-வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் ஜேக் டிராப்ப ரிடம் 6-4, 6-4, 6-4 என்ற  செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார்.  மற்றொரு 2-வது சுற்று ஆட்ட த்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஷ்யாவின் மெத்வதேவ், பிரான்சின் ஆர்தரை 6-2, 7-5, 6-3  என்ற செட் கணக்கில் புரட்டி யெடுத்து 3-வது சுற்றுக்கு முன்னேறி னார். டென்மார்க்கின் ரூத், ஆஸ்தி ரேலியாவின் கிர்ஜியோஸ், ரஷ்யா வின் காஞ்சாநொவ் ஆகியோரும் 3-வது சுற்றில் நுழைந்தனர்.