112 ஆண்டு பழமையான டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டத்தில் உல கத்தரவரிசையில் 7-ஆம் இடத்தில் இருக்கும் கிரீஸின் சிட்ஸிபாஸ், தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பிரிட்ஸை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-6 (7-3), 5-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரிட்ஸ் வெற்றி பெற்று சிட்ஸிபாஸுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், பிரிட்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜோக்கோவிச் மிரட்டல்
மற்றொரு 4-ஆவது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், செர்பிய நாட்டவருமான ஜோகோவிச் 6-0, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் பிரான் சின் அட்ரியனை வீழ்த்தி காலிறு திக்கு முன்னேறினார். இத்தாலி யின் சின்னர் 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் காச்சா நோவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கவுப் அபாரம்
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆவது சுற்று ஆட்டத் தில் உலகத்தரவரிசையில் 4- ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப் 6-1, 6-2 என்ற செட் கணக் கில், தரவரிசையில் இல்லாத போலந்தின் பிரெச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன் னேறினார். உலகத்தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத அமெரிக்கவின் அனிஸ்மோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
உக்ரைனின் மார்ட்டா, செக்குடியரசின் கெர்ஜிசிகோவா ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.
உணவு, உடை, படுக்கை : மைதானங்களிலேயே குடியிருக்கும் ரசிகர்கள்
கடந்த காலங்களை போல் அல்லாமல் நடப்பு சீசன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒவ்வொரு ஆட்டமும் (ஆடவர் ஒற்றையர் பிரிவில்) சராசரியாக 3 மணிநேரத்திற்கு மேல் நடக்கிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-ஆவது சுற்றில் 5-க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீண்டு நிறைவு பெற்று வருகிறது.
ஒன்றரை மணிநேரத்தில் நிறைவுபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் கூட இரண்டரை மணிநேரமாக நீள்கிறது. அதாவது வழக்கமாக 7 மணிநேரத்தில் 4 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், 7 மணிநேரத்தில் 2 ஆட்டங்கள் மட்டும் நடைபெறுவதால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒருநாள் என்பது 16 மணிநேரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால் தீவிர டென்னிஸ் விரும்பிகள் மற்றும் தங்கள் நாட்டு வீரர் - வீராங்கனைகளின் ஆட்டத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள் உணவு, உடை, படுக்கைகளுடன் மைதானத்திலேயே குடியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.