மற்ற விளையாட்டைக் காட்டிலும் டென்னிஸ் உலகில் முக்கியமான கிளைமேக்ஸ் ஒன்று உள்ளது. அது யாதெனில் ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) இந்த வீரர்கள் - வீராங்கனைகள் தான் நட்சத்திர அந்தஸ்து உடையவர்கள் என்றும், காயம் அல்லது ஓய்வு பெறும் வரை அவர்களை வீழ்த்த வாய்ப்பில்லை என்ற ஆதிக்க மனநிலை உள்ளது. இந்த ஆதிக்க மனநிலையை உடைப்பது மிகவும் கடின மானது ஆகும். கிட்டத்தட்ட 7 ஆண்டு களுக்கு மேல் போராட வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் போராட்ட அனுபவத்தின் ஆதிக்க நிலையில் இருக்கும் சீனியர் வீரர்களை வீழ்த்தி வரலாறு படைப்பார்கள். இதுதான் அந்த கிளைமேக்ஸ்.
பெடரர் - நடால் - ஜோகோவிச்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2000 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் பெடரர் (சுவிஸ்), நடால் (ஸ்பெயின்) ஆகியோர் ஆதிக்க நிலையை உடைத்தனர். 2010 முதல் 2020 வரை யிலான காலகட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) ஆதிக்க நிலையை தகர்த்தார். அதன்பிறகு டென்னிஸ் ஆதிக்க தசாப்தம் முற்றிலுமாக நொறுக்கப்பட்டது. காரணம் இளம் வீரர்களின் மாறுபட்ட ஆக்ரோஷ ஆட்டத்தால் ஒரு சில தொடர்களிலேயே அனுபவத்தை பெற்று குறுகிய காலத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டிச் செல்லும் சம்பவம் மிக அதிகமாக அரங்கேறி வருகிறது.
ரஷ்யாவின் மெத்வதேவ் (1 கிராண்ட்ஸ்லாம்), ஸ்பெயி னின் அல்காரஸ் (2 கிராண்ட்ஸ்லாம்) ஆகியோர் மிக குறுகிய காலத்தில் ஜோகோவிச்சின் ஆதிக்கத்தை தகர்த்தனர். இவர்களுக்கு ஜோகோவிச் பதிலடி கொடுத்து போராடி வரும் நிலையில், தற்போது அவருக்கு புதிய தலைவலியாக இத்தாலியின் சின்னரும் மூன்றாம் பிறை போல உருவெடுத்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சின்னரை டென்னிஸ் உலகிற்கே தெரியவரும். முறையான பயிற்சி மற்றும் துடிப்பான ஆட்டத்தால் ஒரே ஆண்டில், அதாவது 2023இல் தனது நாட்டிற்கு (இத்தாலி) டேவிஸ் கோப்பையை பெற்றுக் கொடுத்து 48 ஆண்டுகால வரலாற்றை உடைத்தார். தொடர்ந்து சமீபத்தில் நிறைவுபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், மெத்வதேவ் ஆகியோரை வீழ்த்தி தனது கன்னி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 22 வயதில் கையிலேந்தி வரலாறு படைத்தார். ஆண்டுக்கணக்கில் போராட்டம் தேவையில்லை, புரிதல், தீவிர பயிற்சி, கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்லலாம் என டென்னிஸ் உலகின் புதிய ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார் இத்தாலியின் சின்னர்.
அல்காரஸ்
சின்னர் லிஸ்டில் ஸ்பெயின் நாட்டின் இளம் வீரரான அல்காரஸையும் (20) சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் 2 ஆண்டுகளில் ஆதிக்க நிலையை தொடராமல் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.