3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், அதிரடிக்கு பெயர் பெற்ற ஜெர்மனி நட்சத்திர வீராங்கனையுமான முகுருசா தனது 2-வது சுற்று ஆட்டத்தில் செக்குடியரசின் லிண்டாவை 6-0, 6-4 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகளான பிளிஸ்கோவா (செக்குடியரசு), காலின்ஸ் (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
போபண்ணா ஜோடி அவுட்
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - யாங் (சீனா) ஜோடி, கேப்ரில்லா (கனடா) - மேக்ஸ் (ஆஸ்திரேலியா) ஜோடியை எதிர்கொண்டது. தொடக்க புள்ளியில் இருந்து பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் போபண்ணா - யாங் ஜோடி அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறியது.