கால்பந்து உல கின் பிரபல நடுகள வீரரும் ஸ்பெயின் கால்பந்து அணியின் நட் சத்திர வீரருமான ஜூவன் மாட்டா (34) பிரிட்டன் கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியி லிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு செல்சியா (ஸ்பெயின்) கிளப் அணியில் விளை யாடி கொண்டிருந்த ஜூவனை ரூ.307 கோடிக்கு வாங்கியது மான்செஸ்டர் யுனைடெட். மான்செஸ்டர் யுனை டெட் அணிக்காக 8 ஆண்டு கள் விளையாடியுள்ள ஜூவன் ஏறக்குறைய தன்னுடைய சொந்த ஊருக்கு அதிகம் திரும்பா மல் அந்த அணியில் ஒரு குடும்ப உறுப்பினர் போன்று உள்ளார். தற்போது திடீரென மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகு வதாக அறிவித்துள்ளதால் அந்த அணி யின் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.