games

img

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆன்டி முர்ரே முன்னேற்றம்

ஸ்பெயின் நாட்டின் முக்கிய டென்னிஸ் தொடரான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது பாதிக்கட்டத்தை கடந்துவிட்ட நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் நட்சத்திர நாயகனும்,  பிரிட்டன் வீரருமான ஆன்டி முர்ரே தரவரிசை இல்லாமல் களமிறங்கி,  14-வது தரவரிசையுடன் களம் கண்ட கனடாவின் சபோவலோவை 6-1, 3-6, 6-2 என்ற  செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். நீண்ட  கால இடைவெளிக்கு பின் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆன்டி முர்ரே 4-வது சுற்றுக்கு முன்னேறி இழந்த பார்மை மீட்டுள்ளார். மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்பியா, ஜியார்ஜியா வின் நிக்கோலஸை 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.