ஸ்பெயின் நாட்டின் முதன்மையான ஏடிபி டென்னிஸ் தொடரான மாட்ரிட் ஓபன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் பெகுலா, சுவிஸின் ஜில்-லை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவில் வியாழனன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபேர் இறுதிக்கு முன்னேறினார். ஒன்ஸ் ஜாபேர் - பெகுலா மோதும் இறுதி ஆட்டம் சனியன்று இரவு 10 மணிக்கு நடைபெறுகிறது.
குழப்பமான வரிசையில் நடைபெறும் சுற்றுகள்
பொதுவாக டென்னிஸ் விளையாட்டில் முதல் சுற்று முழுமையாக முடிந்த பின்பு 2-வது சுற்று நடத்தப்படும். இதே செயல்முறையில் ஒவ்வொரு சுற்று நிறைவு பெற்ற பின்பு இறுதிப்போட்டி நடைபெறும். ஆனால் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் வரிசைகள் எதுவும் சரியாக பின்பற்றவில்லை. 3-வது சுற்று நிறைவு பெறுவதற்குள் 4-வது சுற்று ஆட்டம் நடத்தப்பட்டுள்ளது. 4-வது சுற்று நிறைவு பெறுவதற்குள் காலிறுதி ஆட்டங்கள் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான சுற்று முறை எப்படி சாத்தியமானது என்பது தான் இதுவரை புரியவில்லை.
ஐபிஎல்
இன்றைய ஆட்டங்கள்
பஞ்சாப் - ராஜஸ்தான்
நேரம் : மாலை 3:30 மணி
இடம் : வான்கடே மைதானம், மும்பை
லக்னோ - கொல்கத்தா
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : மராட்டிய சங்க மைதானம், புனே