games

img

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் இறுதியில் ஸ்வியாடெக்

சர்வதேச டென்னிஸ் போட்டிக ளில் முக்கிய தொடரான இந்தி யன் வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலி போர்னியா நகரில் நடைபெற்று வரு கிறது. தற்போது இந்த தொடர் இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் போலந்து நாட்டின் ஸ்வியாடெக், டென்னிஸ் உலகின் அதிரடி நாயகியும், ருமேனியா நாட்ட வருமான சிமோனே ஹாலேப்பை 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் படோஷாவை, கிரீஸின் சக்கரி 6-2, 4-6, 6-1 என்ற  செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் 

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் ரப்லேவ், பல்கேரியாவின் டிமிட் ரோவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் பிரிட்ஜ் செக் குடியரசின் மியோ மிரை 7-6 (7-5), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை யிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இன்றைய ஆட்டங்கள் 
மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டம் 
ஸ்வியாடெக் (போலந்து) - சக்கரி (கிரீஸ்)

நேரம் : ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள், ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் நிறைவு பெற்ற பின்பு மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டம் தொடங்கும். தோராயமாக கூறினால் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.