games

img

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் 

இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடாலை இளம் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் மோதினர். 

காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் போட்டியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற சந்தேகத்திலிருந்துள்ளார்.  எனினும், இந்த போட்டியில் விளையாடிய அவர்,  6-3 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதனால், 2வது செட்டை கைப்பற்றுவதில் இருவருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. மிக நெருக்கமான புள்ளிகளில் இருவரும் பயணிக்க, 2வது செட் அதிக நேரம் நீடித்தது. எனினும், அதிரடியாக விளையாடி அடுத்த செட்டையும் 7-6 (7/5) என்ற கணக்கில் டெய்லர் கைப்பற்றினார். 

இந்த போட்டியில் 6-3, 7-6 (7/5) என்ற நேர் செட் கணக்கில் டெய்லர் வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை கைப்பற்றினார்.