games

img

மீண்டும் மோதல் பயிற்சியாளரைப் பிரிந்தார் ஜோகோவிச்

டென்னிஸ் உலகின் அதிரடி வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது பயிற்சியாளர் மரியன் வாய்டாவை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.  ஜோகோவிச் டென்னிஸ் உலகில் தலைசிறந்த வீரராக உயர கடந்த 15 வருட காலமாக கடினமாக உழைத்து வந்த ஸ்லோவேகியாவைச் சேர்ந்த மரியன் வாய்டா 2006-ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளராக பணியாற்ற வருகிறார். ஜோகோவிச் - மரியன் பிரிவதற்கான காரணங்கள் என்னவென்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. ஆனால் மரியன் முன்கூட்டியே விலகிவிட்டதாக ஜோகோவிச் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த வருட ஏடிபி ஃபைனஸ் போட்டிக்குப் பிறகு மரியனிடமிருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். 

2-வது முறையாக பிரிந்தனர்

ஜோகோவிச்சிற்கு கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பயிற்சி அளித்து வரும் மரியன் ஏற்கெனவே 2017-ஆம் ஆண்டு புரிதல் இல்லாததால் இருவரும் பிரிந்தனர். அடுத்த சில மாதங்களில் மீண்டும் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.